தொலைபேசியின் மூலம் பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி அழுத்தம் கொடுத்தாரா? - சபையில் கேள்வி

Published By: Vishnu

20 Sep, 2018 | 06:13 PM
image

(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

பதவியில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொலைபேசியின் மூலம் பொலிஸ் மா அதிபருக்கு அழுத்தம் பிரயோகம் செய்துள்ளாரா? என கூட்டு எதிரணியினர் சபையில் கேள்வி எழுப்பினர். 

இதன்போது பொலிஸ் மா அதிபரை பதவி விலகுமாறு ஜனாதிபதியோ பிரதமரோ கோரவில்லை. தொலைபேசி உரையாடல் தொடர்பில் எனக்கு எதுவும் கூற முடியாது. எனினும் பொலிஸ் மா அதிபர் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடு தொடர்பில் அவருக்கு எதிராக அமைச்சு மட்டத்தில் விசாரணை ஆரம்பிக்கப்படவுள்ளதாக சட்டம் ஒழுங்கு பிரதி அமைச்சர் நளின் பண்டார பதிலளித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை வாய்மூல விடைக்கான வினா நேரம் நிறைவடைந்த பின்னர் கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத் மேற்கண்டவாறு விசேட கேள்வியொன்றை ஆளும் தரப்பின் மீது தொடுத்தார். இதன்போதே நளின் பண்டார இவ்வாறு பதிலளித்தார்.

அரசியலமைப்பு பேரவையின் ஊடாகவே பொலிஸ் மா அதிபரை தெரிவு செய்கின்றனர். ஆகவே பொலிஸ் மா அதிபர் விவகாரம் எம்மால் தலையிட முடியாது.ஏனெனில் தற்போது ஆணைக்குழுவுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன எனினும் பொலிஸ் மா அதிபர் தொடர்பான முறைப்பாடுகள் குறித்து அமைச்சு மட்டத்தில் விசாரணை முன்னெடுக்கவுள்ளோம். தற்போது அமைச்சர் ரன்ஜித் மத்தும பண்டார இது தொடர்பாக அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-03-19 17:03:35
news-image

பொலிஸாருக்கு எதிராக இரு யுவதிகள் தாக்கல்...

2024-03-19 17:05:31
news-image

தேர்தலுக்கு பணம் திரட்டுவதற்காக அரசாங்கம் 2...

2024-03-19 16:45:00
news-image

நெடுங்கேணியில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

2024-03-19 16:49:55
news-image

கோப் குழுவிலிருந்து மரிக்கார் இராஜினாமா!

2024-03-19 16:40:26
news-image

யாழ். பல்கலை முன்றலில் போராட்டம்

2024-03-19 16:32:24
news-image

லிந்துலையில் வர்த்தக நிலையம் உடைத்து கொள்ளை

2024-03-19 16:18:54
news-image

கோப் குழுவிலிருந்து சரித ஹேரத் இராஜினாமா!

2024-03-19 15:59:04
news-image

“ குபுகட பச்சயன்” குற்றக் கும்பலை...

2024-03-19 16:00:44
news-image

கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

2024-03-19 16:00:14
news-image

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முழுநாள் வேலைநிறுத்தம்!

2024-03-19 16:06:01
news-image

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழில்...

2024-03-19 15:38:30