கிளிநொச்சி வைத்தியசாலை கழிவுகளை அகற்றுவதில் சிரமம்

Published By: Digital Desk 4

20 Sep, 2018 | 05:17 PM
image

கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் கழிவுகளை அகற்றுவது மிகவும் சிரமமாக இருப்பதாக கரைச்சி பிரதேச சபை சுட்டிக் காட்டியுள்ளது. 

கிளிநொச்சி வைத்தியசாலையில் கரைச்சி பிரதேச சபையின் கழிவகற்றும் குப்பைத்தொட்டியில் நோயாளிகளுக்கு மருந்து ஏற்றும் ஊசிகள் சிறிஞ் உடனும் தனியாகவும் போடப்பட்டுள்ளமையால் கழிவகற்றும் ஊழியர்கள் பாதிக்கப்படுவதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கும் நிர்வாக உத்தியோகத்தருக்கும் 09 ஆம். 12 ஆம் திகதிகளில்

கரைச்சி பிரதேச சபை தவிசாளரினால் அனுப்பப்பட்ட கடித்ததில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது 

அத்துடன் குறித்த வைத்தியசாலையில் கழிவகற்றும் போது நோயாளர்களுக்கு ஏற்றப்பட்ட ஊசி குற்றி 11 ஆம் திகதி அன்றும் ஒரு ஊழியர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார் 

இப் பிரச்சனை வைத்தியசாலை நிர்வாகத்தால் சீர் செய்யப்படாமையால் கிளிநொச்சி வைத்தியசாலை கழிவு அகற்றுதலில் தொடர்ந்தும் இழுபறிகள் நீடித்துள்ளது இந்நிலைமை நீளுமாயின் கழிவகற்றும் பணி நிறுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது 

ஓர் நோயாளிக்கு ஏற்றப்பட்ட ஊசி பிறிதொருவருக்கு குற்றினால் அவருடைய உடம்லில் உள்ள பாரிய நோய்கள் கூட ஒருவருக்கு தொற்றுவதற்கான சந்தர்ப்பம் இருப்பது வைத்தியசாலை நிர்வாகத்திற்கு தெரிந்தும் இதனை சீர்செய்யாதிருப்பது ஏன் என சமூக ஆர்வகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர் 

கரைச்சி பிரதேச சபையினரால் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு  அனுப்பிய கடிதங்கள் அடங்கலாக எமது பிராந்திய செய்தியாளர் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களை கேட்டு விண்ணப்பம் செய்தமைக்கு அமைவாக இவ் ஆவணகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36