விமானத்தில் இருந்த பயணிகளின் மூக்கு, காதுகளில் இரத்தம் வடிந்ததால் பரபரப்பு

Published By: Daya

20 Sep, 2018 | 04:15 PM
image

மும்பையில் இருந்து புறப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானத்தின் கேபின் அழுத்தத்தால் பயணிகளின் மூக்கு மற்றும் காதுகளில் ரத்தம் வழிந்து உடல் நலம் பாதிக்கப்பட்டதையடுத்து விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 

மும்பையில் இருந்து இன்று காலை ஜெய்ப்பூருக்கு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் 166 பயணிகளுடன் புறப்பட்டது. சிறிது நேரத்திலேயே மீண்டும் மும்பை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியது. பயணிகள் அவசரம் அவசரமாக தரையிறக்கப்பட்டனர். இதனால் விமான நிலையத்தில் திடீர் பரப்பரப்பு ஏற்பட்டது. 

 விமானம் புறப்படும் போது, விமான கேபின் அழுத்தத்தை பராமரிக்காமையினால் அதிக அழுத்தம் காரணமாக 30க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு காது மற்றும் மூக்கு வழியாக இரத்தம் வழிந்துள்ளது.  சில பயணிகளுக்கு கடுமையான தலைவலி ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு மும்பை விமான நிலையத்தில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. 

குறித்த சம்பவம் தொடர்பாக விமான விபத்து புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. விமானத்தினுள்ள காற்றின் அழுத்தத்தை பரிசோதிக்காமல் விமானத்தை இயக்கியதே பயணிகளின் உடல் உபாதைகளுக்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right