முதல்வன் பாணியில் சம்பந்தனுக்கு சவால்விட்டார் ஆனந்தசங்கரி

Published By: Digital Desk 4

20 Sep, 2018 | 03:18 PM
image

சம்பந்தன் தனது பதவியை துறந்து ஒருநாள் பதவியை எனக்கு தந்து பார்க்கட்டும் அவரது பதவியிலிருந்து எவ்வாறானவற்றை சாதிக்கலாம் என காட்டுகிறேன் என ஆனந்தசங்கரி கிளிநொச்சியில் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலை கூட்டணியின் தலைமை அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் அவர் குறிப்பிடுகையில்,

தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் தான் 2004 ஆம் ஆண்டு முதல் யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருக்கையிலேயே வலியுறுத்தி வந்துகொண்டிருக்கின்றேன். ஆனால் இன்று அரசாங்கத்திற்கு ஆதரவளித்துக்கொண்டுள்ள சம்பந்தன் தலைமையிலானவர்கள் இவர்கள் விடயத்தில் அக்கறை செலுத்துவதாக தெரியவில்லை. 

இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் சரத்தில் உள்ளவாறு தமிழ் அரசியல் கைதிகள் பொது மன்னிப்படிப்படையில் விடுதலை செய்யப்பட வேண்டும். அதைத்தான் குறித்த ஒப்பந்தம் சுட்டிக்காட்டுகின்றது. 

அரசாங்கத்தின் சலுகைகளை அனுபவித்துவரும் அவர்கள் கைதிகளின் விடுதலை தொடர்பில் வலியுறுத்த தவறியுள்ளனர். அரசாங்கத்தை தாம்தான் காப்பாற்றுவதாகவும், தம்மால்தான் அரசாங்கம் உருவாக்கப்பட்டது எனவும் வெறுமனே கூறிக்கொள்ளும் சம்பந்தன் நாளைதான் பிரதமருடனும், ஜனாதிபதியுடனும் பேசப்போகின்றாராம். அப்படியானால் இதுவரை இவர்கள் என்ன செய்தார்கள்.

உங்களால் முடியாவிட்டால் நீங்கள் வைத்துள்ள பதவியை ஒருநாள் எனக்கு தந்து பாருங்கள்.. அப்பதவியின் மூலம் என்னென்ன செய்ய முடியும் என்பதை காண்பிக்கின்றேன். என  அவர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30