“கொழும்புக் குப்பைகளை அடாவடியாக புத்தளத்தில் கொட்டினால் மக்கள் போராட்டம் வெடிக்கும்“

Published By: Daya

20 Sep, 2018 | 11:38 AM
image

எமது பிரதேசத்தில் உள்ள மக்களை அச்சுறுத்தி கொழும்பு குப்பைகளை புத்தளத்தில் கொட்டும் திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும் எனக் குறிப்பிட்ட புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிசாந்த பெரேரா, அடாவடித்தனத்தின் மூலம் இந்த திட்டத்தை முன்னெடுக்க முற்பட்டால் மக்களை வீதிக்கு இறக்கி தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுப்போம் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை புத்தளம் அருவக்காடு பகுதியில் கொட்டும் திட்டத்தை கைவிடுமாறும் கோரி புத்தளம் புதிய எலுவன்குளம் பகுதியில் புதன்கிழமை (19) மூவின மக்களும் , சமயத் தலைவர்களும் , மக்கள் பிரதிநிதிகளும் இணைந்து முன்னெடுத்த பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் மேலும் ௯றியதாவது, கொழும்பு பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை புத்தளம் அருவக்காடு பிரதேசத்தில் கொட்டுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.குப்பை கொட்டுவதற்கு தெரிவுசெய்யப்பட்ட இடத்திற்கு அருகில் சேரக்குளி எனும் மீன்பிடிக் கிராமம் ஒன்று உள்ளது. அதற்கு பக்கத்தில் கரைத்தீவு கிராமம் உள்ளது.

எனவே, அருவக்காடு பகுதியில் கொழும்பு  குப்பைகளை கொண்டுவந்து கொட்டுவதனால், அதிலிருந்து வெளியாகும் கழிவுநீர் களப்புடன் கலந்துவிடும்.இதனால் இந்த பிரதேச மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது மட்டுமன்றி, சுற்றுப்புற சூழலுக்கும், சுகாதாரத்திற்கு பாரிய அச்சுறுத்தலாகவும் மாறிவிடும்.அதுமாத்திரமின்றி, இலங்கையின் உப்பு உற்பத்தியில் புத்தளம் மாவட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.

எனவே, குறித்த குப்பையிலிருந்து வெளியேறும் கழிவுநீரினால் உப்பு உற்பத்தியில் ௯ட பாரிய சவாலை பிரதேச மக்கள் எதிர்நோக்க வேண்டியிருக்கும்.இதன் காரணமாகவே இந்த பிரதேசத்தில் வாழும் மூவின மக்களும், மூவின சமயத் தலைவர்களும் தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகிறார்கள். மக்கள் பிரதிநிதிகளும் எதிர்ப்புகளை தெரிவிக்கிறார்கள்.

எனவே, குப்பைத் திட்டம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு வருமாறு விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போது, அவர் இங்கு வந்து ஒரு பொலிஸ் அதிகாரியைப் போல நல்லதோ, கெட்டதோ என்ன எதிர்ப்புக்கள் வந்தாலும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தியே தீருவோம் முடிந்தால் தடுத்து நிறுத்துங்கள் எனக் ௯றிச் சென்றுள்ளார்.

அமைச்சர் சம்பிக்க ரணவக்கவே, உங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்க ௯டியவர்கள் நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்டத்தில் இருப்பார்கள்.

அதுபோல உங்களது பேச்சுக்கு அஞ்சுபவர்கள் வேறு மாவட்டங்களில் இருப்பார்கள்.ஆனால், எங்களுடைய மாவட்டத்தில் வாழும் மக்களுக்கு ஏதும் அநியாயங்கள் நடந்தால், எங்களுடைய பகுதியில் உள்ள சமயத் தலைவர்கள் மீது கைவைக்க முற்பட்டால் அதனை நாங்கள் ஒருபோதும் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் என்பதை மிகவும் தெளிவாக சொல்லி வைக்க விரும்புகிறோம்.

எனவே, எமது சூழலை பாதுகாக்க அரசாங்கம் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மக்களை வீதிக்கு இறக்கி பாரிய போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிவரும் எனவும் இத்தருணத்தில் ஞாபகப்படுத்துகிறோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02