எழுந்து நின்றார் பாண்டியா - விளையாடுவது கேள்விக்குறியே

Published By: Vishnu

20 Sep, 2018 | 11:38 AM
image

இந்திய கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரரான ஹர்தீக் பாண்டிய நேற்று இடம்பெற்ற போட்டியில் முதுகுப் பகுதியில் ஏற்பட்ட வலி காரணமாக மைதானத்தில் சுருண்டு விழ, ஸ்ட்ரெட்சரில் மூலம் மைதானத்திலிருந்து வெளியே கொண்டு செல்லப்பட்டார்.

14 ஆசியக் கிண்ணத் தொடரின் ஐந்தாவது போட்டி இந்திய, பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் நேற்று துபாயில் நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

அதன்படி 18 ஆவது ஓவருக்காக பாண்டிய பந்துப் பரிமாற்றம் மேற்கொள்ள பாபர் அசாம் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்தார். இதன்போது பாண்டிய 17.5 ஆவது பந்தை போட்டு முடிக்க முதுகு பகுதியில் ஏற்பட்ட வலி காரணமாக மைதானத்தில் சுருண்டு வீழ்ந்தார்.

இதையடுத்து அவருக்கு முதல் உதவிகள் வழங்கப்பட்டு மைதானத்தில் இருந்து ஸ்ட்ரெட்சரில் மூலம் அவர் வெளியே கொண்டு செல்லப்பட்டார். பாண்டியாவுக்கு என்ன நடந்தது என்று மைதானத்தில் உள்ளவர்களும் அணியினரும் குழப்பமடைய 17 ஓவரின் இறுதிப் பந்தினை அம்பத்தி ராயுடு போட்டு முடித்தார்.

எனினும் போட்டியின் முடிந்தவுடன் பாண்டிய வழங்கப்பட்ட முதலுதவிகள் மூலம் எழுந்து நடத்துள்ளார். இந் நிலையில் அவரது காயம் குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) ஒரு அறிக்கையை வெளியிட்டள்ளது. அதில், அவரது உண்டான வலி தற்போது குறைவடைந்துள்ளது. எனினும் அவருக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைக்குறிய மருத்துவ சான்றிதழ்கள் கிடைக்கப் பெற்றதன் பின்னரே உத்தியோகபூர்வமான தகவலை வெளியிட முடியும் என்றது.

இந் நிலையில ஆசியக் கிண்ணத் தொடரில் எஞ்சியுள்ள போட்டிகளில் இந்திய அணிக்கா பாண்டியா தனது  பங்ளிப்பை வழங்குவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21