தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகம் இனந்தெரியாதோரால் தாக்குதல்

Published By: Daya

20 Sep, 2018 | 09:56 AM
image

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி அலுவலகம் மீது இனந்தெரியாதோரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர். 

சாவகச்சேரி மீசாலை மேற்கிலுள்ள இந்த அலுவலகத்தின் மீது நேற்றிரவு 11 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:-

நேற்று இரவு 11 மணியளவில் மேற்படி கட்சியின் அலுவலகத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற குழுவொன்று கட்சியின் பெயர் பலகையை அடித்து சேதப்படுத்தியுள்ளது.

இதன்போது கட்சியின் வயதான உறுப்பினர் ஒருவர் அந்த அலுவலகத்திற்குள் இருந்துள்ளார். ஆனாலும் பலர் புகுந்து சத்தத்துடன் அடித்து சேதப்படுத்தியமையால் அச்சம் காரணமாக அவர் வெளியில் வரவில்லை.

அங்கு சத்தங்கள் குறைந்த பின்னர் வந்து பார்த்த போது பெயர்ப்பலகையை அடித்து உடைத்தவர்கள் தப்பிச்சென்று விட்டனர். இதனையடுத்து சம்பவம் தொடர்பில் கட்சித் தலைமைக்குத் தெரியப்படுத்தியதுடன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுர திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:47:53
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38