(நா.தனுஜா)

நாட்டின் பொருளாதாரம் இவ்வருடத்தின் இரண்டாம் காலாண்டில் 3.7 சதவீதமாக வளர்ச்சியடைந்துள்ளது என தெரிவித்த தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம், 2017ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் விவசாயம் மற்றும் சேவைத்துறைகள் என்பன குறித்தளவு அதிகரிப்பினையும், கைத்தொழில்துறை சிறியளவிலான அதிகரிப்பனையும் பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பட்டுள்ளது.

இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டுக்கான நடப்பு மற்றும் நிலையான விலைகளில் மதிப்பிடப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அவை தொடர்பான பொருளாதாரக் குறிகாட்டிகள் என்பன அடங்கிய அறிக்கை தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. 

அவ்வறிக்கையிலேயே மேற்கண்ட விடயம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.