பிரதி பொலிஸ் மா அதிபர் நாலகவுக்கு கட்டாய விடுமுறை

Published By: R. Kalaichelvan

19 Sep, 2018 | 05:10 PM
image

பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக டீ சில்வாவை கட்டாய விடுமுறையில் அனுப்புமாறு பொலிஸ் மா அதிபருக்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு பணித்துள்ளது.இதேவேளை, பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக டீ சில்வாவிற்கு கட்டாய விடுமுறை வழங்குமாறு சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார பொலிஸ் ஆணைக்குழுவிற்கு பரிந்துரை வழங்கியிருந்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கோத்தாபய  ராஜபக்ஷ ஆகியோர் மீது தாக்குதல் செய்யும் திட்டத்தில் இருந்ததாக, பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான நாலக சில்வா மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் நாலக சில்வாவை தற்காலிகமாக தகவல் தொழிநுட்ப பிரிவிற்கு இடமாற்றம் செய்ய பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், அவர் மீதான விசாரணைகள் நிறைவடையும் வரையில் அவருக்கு இவ்வாறு கட்டாய விடுமுறை வழங்குமாறு இன்று பிற்பகல் பொலிஸ் ஆணைக்குழுவின் கூட்டத்தின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04