சமூக வலைத்தளங்களுள் ஒன்றான பேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராக அமெரிக்க குடியியல் ஒன்றியம் அமெரிக்க தொழில்வாய்ப்பு சமத்துவ ஆணையத்திடம் முறைப்பாடு செய்துள்ளது.

பேஸ்புக் தொழில்வாய்ப்பு விளம்பரங்களில் பெண்களுக்கெதிராக பாராபட்சம் காட்டுவதாகவே அமெரிக்க குடியியல் உரிமைகள் ஒன்றியம் முறைப்பாடு செய்துள்ளது.

குறித்த முறைப்பாட்டில் பேஸ்புக்கில் வெளியான 10 தொழில்வாய்ப்பு விளம்பரங்களை கோடிட்டு காட்டி அவ் விளம்பரங்கள் 25 முதல் 35 வயது வரையிலான ஆண்களுக்கு மட்டுமே வெளியிடப்பட்டுள்ளதாக முறையிட்டுள்ளனர்.

அவ் விளம்பரங்கள் குறிப்பாக வாகன சாரதிகள் பொலிஸ் கட்டிடத்துறை போன்றவற்றிற்கு மேலே குறிப்பிடப்பட்ட வயதெல்லைக்குட்பட்ட ஆண்களுக்கு மாத்திரமே வெளியிடப்பட்டுள்ளது எனவும் அவற்றில் ஒரு தொழிலையாவது பெண்களுக்கு பரிந்துரை செய்திருக்கலாம் எனவும் முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்காவின் சில மாகாணங்களைச் சேர்ந்த சில பெண்களுக்கு குறித்த விளம்பரங்களை பார்வையிட கூட முடியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்..

பெண்கள் சில தெரிவு செய்யப்பட்ட தொழில்களை மாத்திரமே செய்வதால் பேஸ்புக் தனது விளம்பரங்களை வகைப்படுத்தியுள்ளதாக குறித்த முறைப்பாட்டிற்கு பதிலளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.