பூநகரி பிரதேச சபையின் தவிசாளருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Published By: Digital Desk 4

19 Sep, 2018 | 03:09 PM
image

ஜனநாயக மரபை மீறி, மக்கள் பிரதிநிதியை சபையில் அவமதித்து மக்களுக்கு எதிராகச்  பூநகரிப் பிரதேச சபையின் தவிசாளர்  அருணாசலம்ஐயம்பிள்ளை செயற்பட்டிருக்கிறார் எனத்  தெரிவித்து இன்று பூநகரியில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கடந்த 14 ஆம் திகதி பூநகரி பிரதேச சபையில் இடம்பெற்ற மாதாந்தக் கூட்டத்தின் போது உறுப்பினர்  யோன்பின்ரன் மேரிடென்சியா நிதிக்குழு அறிக்கை மீது கருத்து கூறும் போது சபையில் ஆளும் தரப்பு உறுப்பினர்கள் கடும் இடையூறு செய்தனர். இதனால்  யோன்பின்ரன் மேரிடென்சியா தொடர்ந்து கருத்துக் கூற முடியாத நிலை ஏற்பட்டது.  

இந்த நிலையில்  சபைக்குத் தலைமை தாங்கிய தவிசாளர்  ஐயம்பிள்ளை நேரகாலம் குறிப்பிடாமல் சபையினை ஒத்திவைப்பதாக அறிவித்து சபையிலிருந்து வெளியேறிச் சென்றார். அவ்வாறு வெளியேறி செல்லும் போது 'வாயை மூடிக்கொண்டு வெளியே போ' என்று உறுப்பினரான  யோன்பின்ரன் மேரிடென்சியாவை நோக்கி அச்சுறுத்தும் வகையில் வார்த்தை பிரயோகம்  செய்து கட்டளையிட்டார். 

இது சபையின் ஜனநாயக மரபுக்கும் மக்கள் பிரதிநிதி என்ற உரிமைக்கும் எதிரான செயலாகும். அத்துடன்,  இது மக்கள் பிரதிநிதியாகிய  யோன்பின்ரன் மேரிடென்சியின்   கௌவரவத்திற்கும்,சபை நடவடிக்கைக்கும்  முரணானது என்பதோடு, புதிய தேர்தல் முறையின் கீழ் தெரிவு செய்யப்பட்டுள்ள பெண் உறுப்பினர்களுக்கு சபையில் உரிய பாதுகாப்பு, கௌரவம், நியாயம் என்பனவற்றை இல்லாதொழிக்கும் தீயமுயற்சியுமாகும். எனத் தெரிவித்து  தவிசாளருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்  செய்யதனர்.

ஆர்ப்பாட்டத்தில்  கலந்துகொண்டவர்கள்  தவிசாளரே தகைமையை வளர்த்துக்கொள், பூநகரியில் நடப்பது காட்டாட்சியா? மக்களாட்சியா?  பெண்களை மதிக்காத அரசியல் அநாகரீகத்தை எதிர்ப்போம், மக்கள் உரிமையை காப்போம், பெண்களை அவமதிக்காதே ஜனநாயக உரிமையை மீறாதே, பிரதேச சபையா அல்லது கட்சி அலுவலகமா போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.

இது தொடர்பில் பூநகரி பிரதேச சபையின் தவிசாளர் அ. ஜயம்பிள்ளையிடம் வினவிய போது  தான் அவ்வாறு நடந்துகொள்வில்லை என்றும், சபையில் அமைதியின்மை ஏற்படுவதனை தடுக்கவே  இரண்டு உறுப்பினர்களை வெளியேறுமாறு அறிவித்ததாகவும் தெரிவித்த அவர் கட்சி சார்ந்து சபையினை கொண்டு செல்லவில்லை என்றும் குறிப்பிட்டார்

சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் பூநகரி வாடியடிச் சந்தியிலிருந்து ஆரம்பமாகி பூநகரி பிரதேச சபையினை சென்றடைந்து நிறைவுற்றது. இதில்  பூநகரி பிரதேச சபையின் எதிர்தரப்பு உறுப்பினர்கள் கரைச்சி  கண்டாவளை, பளை பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் பெண்கள் அமைப்பினர் என பலரும் கலந்துகொண்டனர்  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59