பஸ் கட்டணம் 4 சத வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த பஸ் கட்டண அதிகரிப்பு நாளை நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை குறைந்தபட்ச கட்டணமான 12 ரூபாவில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

டீசல் விலை அதிகரிப்பு காரணமாக பஸ் கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பில் இன்று காலை 10 மணி முதல் போக்குவரத்து அமைச்சில் பேச்சுவார்த்தை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை பஸ் கட்டணங்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படாது என அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்தன இன்று முற்பகல் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.