இலங்­கையை உள்­ள­டக்­கிய இந்­திய உப­கண்­டத்தில் கிரிக்கெட் மோகம் அதி­க­ரித்து வரு­கின்ற நிலையில் இலங்கை கிரிக்கெட் அணியை மேலும் உற்­சா­கப்­ப­டுத்தும் பணியை சியெட் தொடங்­கி­யுள்­ளது. முன்­னணி டயர் வர்த்­தக முத்­தி­ரை­யான சியெட் நாட்டின் கிரிக்கெட் அணிக்குப் பின்னால் ரசி­கர்­களை ஒன்று திரட்டும் ஒரு உன்­ன­த­மான பணியைத் தொடங்­கி­யுள்­ளது.

சர்­வ­தேச 20க்கு 20 உலகக் கிண்­ணத்தை இலக்­காகக் கொண்டு இந்த பிர­சாரத் திட்டம் தொடங்­கப்­பட்­டுள்­ளது. மார்ச் மாதம் எட்டாம் திகதி இந்தப் போட்­டிகள் இந்­தி­யாவில் தொடங்­க­வுள்­ளன. சியெட் ஜய­வேவா ஸ்ரீலங்கா எனும் தொனிப்­பொ­ருளில் தொடங்­க­வுள்ள இந்தப் பிர­சாரம் மிகப் பெரிய அள­வி­லான LED டச்ஸ்­கிரீன் பொருத்­தப்­பட்ட டிரக் வண்­டியைக் கொண்­டி­ருக்கும். 25 நாட்­க­ளுக்கு இலங்கை முழு­வதும் வலம் வர­வுள்ள இந்த டிரக் வண்­டியில் அதி நவீன தொழில்­நுட்ப முறையை பயன்­ப­டுத்தி ரசி­கர்கள் தமது அணிக்­கான வாழ்த்­தினை பதிவு செய்ய முடியும்.இந்த பிர­தான டிரக் வண்­டிக்கு புறம்­பாக இன்­னொரு வண்­டியும் அதை பின் தொடரும்.

அதிலும் மிகப் பெரிய LED திரை பொருத்­தப்­பட்டு அன்­றைய தினத்தில் இடம்­பெ­று­கின்ற விளை­யாட்டுப் போட்­டிகள் நேர­டி­யாக ஒளிப­ரப்­பப்­படும். இலங்­கையின் பிர­தான 51 நக­ரங்­கனை ஊட­றுத்து இந்த டிரக் வண்­டிகள் வலம் வர­வுள்­ளன.

ரசி­கர்கள் தமது பெயர் மற்றும் தொலை­பேசி இலக்கம் என்­ப­ன­வற்றைப் பதிவு செய்­வதன் மூலம் டிஜிட்டல் திரை­வ­ழி­யாக அவர்கள் படம் பிடிக்­கப்­பட்டு அவர்­களின் வாழ்த்து பதி­வாகும். இவ்­வாறு பிடிக்­கப்­படும் ரசி­கர்கள் அனை­வ­ரதும் படங்கள் இலங்­கையின் தேசப் பட உரு­வத்­துக்குள் பதிவு செய்­யப்­பட்டு ஒட்டு மொத்த வாழ்த்­தாக உரு­வாக்­கப்­படும்.