சங்­கக்­கார, ஜய­வர்­தன ஆகி­யோ ரின் ஓய்­வையே எப்­போதும் தோல்­விக்கு காரணம் காட்ட முடி­யாது என்று இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்­பாட்ட வீரர் டில்ஷான் கூறி­யுள்ளார். இரு­ப­துக்கு 20 உலகக் கிண்ணத் தொடர் இந்­தி­யாவில் களை­கட்ட தொடங்­கி­யுள்­ளது. இதற்­காக இலங்கை அணி இந்­தி­யா­வுக்கு பய­ண­மா­கி­யுள்­ளது.

இந்­நி­லையில் உல­கக்­கிண்ண இருப­துக்கு 20 தொடர் குறித்து இலங்கை அணியின் தொடக்க வீரர் டில்ஷான் கூறுகையில், ”எங்கள் அணியில் அதிக அளவில் இளம் வீரர்கள் உள்ளனர்.

சமீபத்திய தொடர்களால் இருந்து அவர்கள் அதிக அனுபவம் பெற்றிருப்பார்கள். முன்னாள் வீரர்களான சங்கக்கார, ஜயவர்தன ஆகியோர் அணியில் இல்லை என்று எப்போதும் நாம் காரணம் காட்ட முடியாது.

அனுபவ வீரர்களான சனத் ஜயசூரிய, அரவிந்த டி சில்வா ஆகியோர் அணியில் இருந்து ஓய்வு பெற்ற போதும் நாங்கள் அணியை சிறப்பான நிலைக்கு கொண்டுவந்தோம். எனவே ஓய்வு பெற்ற வர்களை பற்றி பேசி ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை. இளம் இலங்கை அணி தயாராக உள்ளது. அவர்கள் முழு பங்களிப்பையும் விரைவில் அணிக்கு அளிப்பார்கள் என்றும் நம்ப வேண்டும்” என்று கூறியுள்ளார்.