இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள இங்கிலாந்து அணி, இலங்கை அணியுடன் ஐந்து ஒருநாள் போட்டிகள், ஒரு இருபதுக்கு 20 போட்டி மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.
அதன்படி இவ்விரு அணிகளுக்குமிடையேயான இப் போட்டித் தொடரானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி நவம்பர் மாதம் 27 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் முதலில் ஆரம்பமாகவுள்ள ஐந்து ஒருநாள் போட்டித் தொடரின் முதல் போட்டி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி (பகல் 2.30)தம்புள்ளை, ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும் இரண்டாவது போட்டி 13 ஆம் திகதி (காலை 10.00) அதே மைதானத்திலும் இடம்பெறும்.
அத்துடன் ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டி 17 ஆம் திகதி (பகல் 2.30) கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும் நான்காவது போட்டி 20 ஆம் திகதி (கலை 10.00) அதே மைதானத்திலும் இடம்பெறுவதுடன் ஒருநாள் போட்டித் தொடரின் ஐந்தாவதும் இறுதியுமான போட்டி 23 ஆம் திகதி (பகல் 2.30)கொழும்பு, ஆர்.பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறும்.
மேலும் இவ்விரு அணிகளுக்கிடையிலான ஒரேயொரு இருபதுக்கு 20 போட்டியானது ஒக்டோபர் மாதம் 27 ஆம் திகதி கொழும்பு, ஆர்.பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகும்.
அத்துடன் இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கான மூன்று டெஸ்ட் போட்டித் தொடர்களின் முதல் போட்டி நவம்பர் மாதம் 6 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை காலி, சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளதுடன், இரண்டாவது டெஸ்ட் தொடர் நவம்பர் 14 ஆம் திகதி ஆரம்பமாகி 18 ஆம் திகதி வரை கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெறும்.
மேலும் கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் ஆரம்பமாகும் மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் தொடரானது நவம்பர் மாதம் 23 ஆம் திகதி ஆரம்பமாகி 27 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM