ஆஸி., கனடாவிலிருந்து ஊடுருவியவர்களால் யோஷிதவுக்கு எதிரான சான்றுகள் பல அழிப்பு

Published By: Raam

10 Mar, 2016 | 07:47 PM
image

சி.எஸ்.என். தொலைக்காட்சி அலைவரிசை ஊடாக முன்னெடுக்கப்பட்ட கறுப்புப் பண சுத்திகரிப்பு சட்டம்  , பொதுச் சொத்து துஷ்பிரயோக சட்டத்தின்   கீழான  குற்றங்கள் தொடர்பில்  கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் லெப்டினன் யோஷித ராஜபக்ஷ உள்ளிட்டவர்களுக்கு எதிரான இணைய ஆதாரங்கள் சில வெளி நாட்டில் இருந்து செயற்படும் அடையாளம் தெரியாத நபர்களினால் அழிக்கப்பட்டுள்ளன.

கனடா, அவுஸ்திரேலியாவில் இருந்தே இவ்வாறு அந்த சான்றுகள் அழிக்கப்பட்டுள்ளமை கணினி அவசர நிலைமைகள் தொடர்பிலான ஆய்வகத்தினால் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த நடவடிக்கைக்காக சி.எஸ்.என். நிறுவனத்தின் முன்னாள் தகவல் தொழில் நுட்ப முகாமையாளரின் மின்னஞ்சலே பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று மன்றுக்கு அறிவித்தனர்.

சி.எஸ்.என். நிறுவனத்தின் ஆரம்ப மூலதனமான 234 மில்லியன் ரூபா எவ்வாறு சம்பாதிக்கப்பட்டது என்பது தொடர்பில் விளக்கமளிக்காததை அடிப்படையாகவும் போலி ஆவணங்களை தயாரித்தமை, திட்டமிட்டு நம்பிக்கை துரோகம் செய்தமை , திட்டமிட்ட மோசடி, சுங்க சட்டத்தை மீறியமை மற்றும் நிறுவன சட்டங்களை மீறியமை, அரசாங்க சொத்துக்களை தவறாக பயன்படுத்தியமை ஆகிய குற்றச் சாட்டுக்களின் கீழ் யோஷித்த உள்ளிட்ட 9 சந்தேக நபர்களுக்கு எதிராக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கடுவலை பிரதான நீதிவான் தம்மிக ஹேமபால முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போதே மேற்படி விடயம் மன்றின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:02:42
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32