ஜனாதிபதி தலைமையில் அநகாரிக தர்மபாலவின் 154ஆவது பிறந்த தின தேசிய வைபவம் 

Published By: Daya

18 Sep, 2018 | 09:32 AM
image

உண்மையான தேசப்பற்றாளரான அநகாரிக தர்மபால போன்ற உன்னத புருஷர்கள் நாட்டில் உருவாக வேண்டும் என்பதே என்றும் மக்களது எதிர்பார்ப்பாக காணப்படுகின்றதென ஜனாதிபதி தெரிவித்தார்.

தேசப்பற்றாளரென கருதப்படும் சிலர் பொறுப்புக்களை கையளிக்கும் போது நடந்து கொள்ளும் விதம் தொடர்பில் எமக்கு அனுபவம் உள்ளதுடன், அநகாரிக தர்மபால போன்ற உன்னத தலைவர்கள் தேசப்பற்றினால் அன்று எழுப்பிய உண்மையான கோஷங்கள் அன்றும் இன்றும் என்றும் மக்கள் மனங்களில் உயிரோட்டத்துடன் காணப்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

நேற்று பிற்பகல் கொழும்பு பண்டாராநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற அநகாரிக தர்மபாலவின் 154ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அன்று நாட்டில் நிலவிய பிரச்சினைகள் தற்போதும் காணப்படுவதனால் அநகாரிக தர்மபாலவை போன்ற உத்தமர்களை நினைவவூட்டுதலும் அவர்களை பற்றி அறிந்துகொள்ள முயற்சித்தலும் முன்னுதாரணமாக கொள்ளலும் அவசியமாகும் எனத் தெரிவித்தார்.

மிக மோசமான, நாட்டை சீரழிக்கும் சம்பவங்களின் போது தனது தாய்நாட்டிற்காகவும் மக்களின் எதிர்காலத்திற்காகவும் உருவாகிய கதாபாத்திரங்கள் எமது வரலாற்றில் ஏராளமாக காணப்படுவதுடன், முன்னுதாரணமாகவும் தொலைநோக்கு சிந்தனையுடனும் அவர்கள் பற்றிய செய்திகளை எதிர்கால தலைமுறையினருக்கு கொண்டு செல்வதற்காக அவர்களை நினைவுகூருதல் எமது கடமையாகும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

நேர்மையான சமூகமொன்றை கட்டியெழுப்பும் நோக்குடன் அநகாரிக தர்மபால அவர்களை முன்னுதாரணமாக சமூகமயப்படுத்தும் நோக்குடன் ஜனாதிபதி செயலகமும் புத்தசாசன அமைச்சும் இணைந்து இந்த வைபவத்தை ஏற்பாடு செய்திருந்தன. 

நாட்டில் சுதந்திரம், பௌத்த கல்வி, பௌத்த பாடசாலைகள், பெளத்த அறநெறி கல்வி ஆகியவற்றின் ஆரம்பத்திற்கு முன்னோடியாக விளங்கிய தர்மபாலவின் தேசிய செயற்பணி தொடர்பாக தற்போதைய இளம் சமுதாயத்தினை தெளிவுப்படுத்தும் அபிலாசையுடன் இந்த வைபவத்தில் பெருந்தொகையான பாடசாலை மணவர்கள் பங்குபற்ற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை விசேட அம்சமாகும்.

ஜனாதிபதியினால் அநகாரிக தர்மபால அவர்களின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டதன் பின்னர் வைபவம் ஆரம்பமானது. 

மூன்று நிக்காயாக்களின் மகா சங்கத்தினர், புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா, அமைச்சர் கயந்த கருணாதிலக, மேல் மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணயக்கார உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் புத்தசாசன அமைச்சின் செயலாளர் சந்திரபிரேம கமகே உள்ளிட்ட அரச அதிகாரிகளும் இந்திய உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட அதிதிகளும் இந்த வைபவத்தில் பங்குபற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44