அப்பம் சாப்பிட்டுவிட்டு வரலாற்று தீர்மானம் எடுத்தேன் : 21ஆம் திகதியை நினைவு கூர்ந்த ஜனாதிபதி

23 Nov, 2015 | 01:52 PM
image

 இந்த நாள் எனக்கு மறக்க முடி­யாத நினைவு நாள். கடந்த ஆண்டு இதே­தி­னத்தில் அரசை விட்டு வெளி­யேறி ஜனா­தி­பதித் தேர்­தலில் கள­மி­றங்கும் செய்­தியை வெளி­யிட்டேன். அதற்கு முதல் நாள் முன்னாள் ஜனா­தி­ப­தி­யுடன் ஒன்­றாக இணைந்து அப் பம் சாப்­பிட்டு விட்டு வர­லாற்றுத் தீர்­மா­ன த்தை எடுத்தேன் என நவம்பர் மாதம் 21 ஆம் திக­தியை நினைவு கூர்ந்தார் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, எனக்கு சிறப்­பான பின்­புலம் கிடை­யாது. பிர­புத்­துவ குடும்­பத்தை சேர்ந்­தவன் அல்ல. சாதா­ரண விவ­சாய குடும்­பத்தைச் சேர்ந்­த வன். ஆனால் எனது “நேர்மை” கார­ண­மாக மக்கள் ஜனா­தி­பதி பத­வியை வழங்­கி­யுள்­ளார்கள் என்றும் தெரி­வித்­துள்ளார்.

மாலபே “மாதிரி” பாட­சா­லையில் கடந்த 21 ஆம் திகதி இடம்­பெற்ற பரி­ச­ளிப்பு விழா வில் பிர­தம அதி­தி­யாகக் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே ஜனா­தி­பதி இவ்­வாறு கடந்த வருட நிகழ்வை நினைவு கூர்ந்து உரை­யாற்­றி­யுள்ளார்.


ஜனா­தி­பதி இங்கு மேலும் உரை­யாற்­று­கையில், நான் ஜனா­தி­ப­தி­யாக உங்­க­ளது பாட­சாலை வைப­வத்தில் கலந்­து­கொள்­வது வர­லாற்று நிகழ்­வாக இருப்­பது போன்று எனது தனிப்­பட்ட வாழ்க்­கை­யிலும் இந்த நாள் வர­லாற்றுச் சிறப்பு மிக்க மறக்க முடி­யாத நாளாகும்.


இன்று 21 ஆம் திகதி அதற்கு முதல் நாள் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ வுடன் இணைந்து ஒன்­றாக அப்பம் சாப்­பிட் டேன். அடுத்த நாள் நவம்பர் 21 அர­சாங்­கத்தை விட்டு வெளி­யே­றினேன். இது எனது அர­சியல் வாழ்க்­கையில் திருப்பு முனை­யான நாள். அன்­றைய தினம் எனது “மன­நி­லையின்” செயற்­பாடு எப்­படி இருந்­தது என்­ப­தற்கு எனக்கே விளக்­க­ம­ளிக்க முடி­யாத நிலை காணப்­பட்­டது.


எனவே அன்­றைய மன­நி­லையை என் னால் தற்­போது தெளி­வுப்­ப­டுத்த முடி­யாது. அன்­றைய தினம் பாரா­ளு­மன்­றத்தில் இருந்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் இணைந்து நான் பாரா­ளு­மன்­றத்­தி­லி­ருந்து வெளி­யேறி முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்­கவின் உத்­தி­யோ­கபூர்வ இல்­லத்­திற்குச் சென்றேன். பின்னர் அங்­கி­ருந்து இவர்­க­ளோடு இணைந்து புதிய நகர மண்­ட­பத்தில் இடம் பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்து கொண்டேன்.


இன்று இல்­லா­மையும் வறு­மையும் சமூ­கத்­திற்குள் மனி­தர்­க­ளால் வெற்றி கொள்­வ­தற்கு எந்­த­வி­த­மான தடைக்­கல்­லாக அமை­ய ­வில்லை என்­பதை நாம் புரிந்து கொள்­ள­வேண்டும்.


நான் பொல­ந­றுவை போன்ற கஷ்டப் பிர­தே­சத்தில் சாதா­ரண ஒரு விவ­சாயக் குடும்­பத்தில் பிறந்­தவன். “புழு­தி­க­ளுக்கு” மத்­தியில் வெளிக்­கி­ளம்­பிய ஒரு அர­சி­யல்­வாதி.
எனக்கு சிறப்­பான அர­சியல் பின்­பு­லமோ அல்­லது பிர­புத்­துவ குடும்பப் பின்­ன­ணியோ கிடை­யாது.ஆனால் நேர்­மை­யு­டனும் அர்ப்­ப­ணிப்­பு­டனும் செயற்­பட்டேன். எனவே நாட்டு மக் கள் என்னை இந்­நாட்டின் ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­தனர்.


எனவே பிள்­ளைகள் தமது வாழ்க்­கையில் தரப்­ப­டுத்தும் போது ஒவ்­வொரு தரு­ணத்­தி லும் அர்ப்பணிப்புத் தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
ஒரு நாளின் 24 மணித்தியாலத்திற்கான கால அட்டவணையை தயார் செய்து கொள்ள வேண்டும். அவ்வாறானதோர் நிலையில் உங்கள் முன் உள்ள சவால்களை வெற்றிக்கொள்ள முடியும் என்றும் ஜனா திபதி தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02