அடங்க மறுத்தவர்களை அடக்கி காட்டினார் திஸர ; வெற்றியிலக்கு 250

Published By: Vishnu

17 Sep, 2018 | 10:59 PM
image

இலங்கைக்கு எதிரான ஆசியக் கிண்ணத் தொடரின் மூன்றாவது போட்டியில் திஸர பெரேராவின் அற்புதமான பந்து வீச்சுக் காரணமாக ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 249 ஓட்டங்களை பெற்று, வெற்றியிலக்காக இலங்கைக்கு 250 ஓட்டங்களை நிர்ணயித்தது.

அபுதாபயில் ஆரம்பமான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவுசெய்தது.

அதற்கிணங்க ஆப்பாகானிஸ்தான் அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்டக்காரர்களாக மெஹாமட் ஷஹ்சாத் மற்றும் இஷ்சனுல்லா ஜனாத் ஆகியோர் களமிறங்கினார். இவர்கள் இருவரினதும் நிதானமான ஆட்டத்தின் மூலமாக ஆப்கானிஸ்தான் அணி 10 ஓவர்கள் நிறைவில் விக்கெட் இழப்பின்றி 45 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

ஷஹ்சாத் 26 ஓட்டத்துடனும், ஜனாத் 16 ஓட்டத்துடனும் துடுப்பெடுத்தாடி வந்தனர். இருப்பினும் 11.4 ஆவது ஓவரில் அகில தனஞ்சயவினுடைய பந்து வீச்சில் ஷஹ்சாத் எல்.பி.டபிள்யூ. முறையில் 34 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இவரின் ஆட்டமிழப்பை தொடர்ந்து களமிறங்கிய ரஹ்மத் ஷா ஜனாத்துடன் ஜேடி சோர்ந்தாட ஒரு விக்கெட் இழப்பிற்கு அணி 100 ஓட்டங்களை கடந்தது.

இதற்கடுத்து இந்த ஜோடி 50 ஓட்டங்களை பெற்றிருந்தவேளை ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய ஜனாத் அகில தனஞ்சயவின் பந்து வீச்சில் 45 ஓட்டத்துடன் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்து அரைசாதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டார். இவருக்கு அடுத்தபடியாக களமிறங்கிய அணித் தலைவர் அஸ்கார் ஆப்கானும் ஒரு ஓட்டத்துடன் செஹான் ஜெயசூரியவின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இவரின் வெளியேற்றத்தை தொடர்ந்து ஹஷ்மத்துல்லா ஷஹதி களமிறங்கி ஆடி வர, ஆப்கானிஸ்தான் அணி 30 ஓவர்களுக்கு மூன்று விக்கெட்டுக்களை இழந்து 130 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

34.2 ஓவர்களுக்கு அணியின் ஓட்ட எண்ணிக்கை 150 தொட, அடுத்த பந்தில்  ரஹ்மத் ஷா விளாசிய நான்கு ஓட்டத்துடன் அவர் 63 பந்துகளை எதிர்கொண்டு அரைசதம் கடந்தார். 37.3 ஆவது ஓவரில் மலிங்கவின் பந்து வீச்சில் ரஹ்மத் ஷா அடித்தாட பிடியெடுப்புக்கான வாய்ப்பொன்று இலங்கைக்கு கைகூடி வந்தது. எனினும் அந்த பிடியெடுப்பினை தசூன் சானக்க நழுவ விட்டார்.

அதைத் தொடர்ந்து 40 ஓவர்களின் நிறைவில் ஆப்கானிஸ்தான் அணி மூன்று விக்கெட்டுக்களை இழந்து 183 ஓட்டங்கள் என்ற வலுவான நிலையில் இருந்தது. ரஹ்மத் ஷா 66 ஓட்டத்துடனும் ஷஹதி 28 ஓட்டத்துடனும் தொடர்ந்து துடுப்பெடுத்தாடினர்.

எனினும் ரஹ்மத் ஷா 41.1 ஓவரில் 72 ஓட்டத்துடன் சாமரவின் பந்து வீச்சில் திஸர பெரேராவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழக்க, ஓட்ட குவிப்பின் வேகம் குறைவடைந்தது. இந் நிலையில் 43.5 ஆவது ஓவரில் ஆப்கானிஸ்தான் அணி நான்கு விக்கெட்டுக்களை இழந்து 200 ஐ தொட 44.2 ஓவரில் திஸரவின் பந்தில் ஷஹதி 37 ஓட்டத்துடன் போல்ட் முறையில் ஆட்டமிழக்க அடுத்து வந்த மொஹமட் நாபியும் 15 ஓட்டத்துடன் மலிங்கவின் பந்து வீச்சில் திஸர பெரேராவிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.

இவரையடுத்து களமிறங்கிய நஜிபுல்லா ஸத்ரானும் 12 ஓட்டத்துடன் 47.5 ஆவது ஓவரில் திஸர பெரேராவின் பந்து வீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த குல்பாடின் நாபியும் திஸரவின் பந்தில் அகிலவிடம் பிடிகொடுத்து 4 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய அத்தாப் ஆலம் தான் எதிர்கொண்ட முதல் பந்தையே ஆறு ஓட்டமாக மாற்றி அசத்திக் காட்ட, 49.4 ஆவது ஓவரில் திஸர பெரோ, ரஷித் கானை பொல்ட் முறையில் ஆட்டமிழக்க வைத்து வெளியேற்ற அடுத்து வந்த ரஹ்மானையும் திஸர பெரேரா பொல்ட் முறையில் ஆட்டமிழக்க வைத்து ஐந்தாவது விக்கெட்டையும் சுவீகரித்தார்.

இறுதியாக ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 249 ஓட்டங்களை பெற்று இலங்கைக்கு வெற்றியிலக்காக 250 ஓட்டத்தை நிர்ணயித்தது.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் திஸர பெரேரா ஐந்து விக்கெட்டுக்களையும் அகில தனஞ்சய இரண்டு விக்கெட்டுக்களையும் லசித் மலிங்க, சாமர, செஹான் ஜெயசூரிய ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35