இருபதுக்கு 20 உலக கிண்ண கிரிக்கட் போட்டிகளில் தலைமைப் பொறுப்புக்கு தாம் தயாராவதற்கான மனநிலையை கொண்டிருக்கவில்லை என அஞ்சலோ மெத்திவ்ஸ் தெரிவித்துள்ளார்.

லசித் மாலிங்க உடற்தகுதி பிரச்சினை காரணமாக தலைமைப் பதவிலியிருந்து விலகுவதாக அறிவித்ததை அடுத்து உலக கிண்ண இருபதுக்கு 20 போட்டிகளுக்கான இலங்கை அணியின் தலைவராக அஞ்சலோ மெத்திவ்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

எனினும், தலைமைப் பதவியை மறுக்க முடியாத நிலையில், அதனை ஏற்றுக்கொண்டதாகவும்,தாம் தலைமைப் பொறுப்பில் அனுபவத்தைக் கொண்டிருக்கின்ற போதும், தற்போது அந்த விடயம் சவால்மிக்கதாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும். வித்தியாசமான சூழ்நிலைகளுக்கு மத்தியில் அணியை சிறந்த முறையில் வழிநடத்த தாம் எதிர்பார்ப்பதாகவும் லசித் மலிங்க தான் எங்கள் அணிக்கு இருக்கும் சிறந்த இருபதுக்கு20 போட்டிகளுக்கான வேகபந்து பந்துவீச்சாளராகும் அவரை முதல் போட்டியில் இருந்து அவரது முழு பங்களிப்பை பெற எத்தனித்துள்ளேன்  என்று மெத்திவ்ஸ் தெரிவித்துள்ளார்.