அரசியல் தீர்வு விடயத்தில் அரசுடன் பேசுவது தனிப்பட்ட வியாபாரம் அல்ல - வரதராஜப்பெருமாள்

Published By: Vishnu

17 Sep, 2018 | 02:53 PM
image

(எம்.நியூட்டன்)

தனிப்பட்ட வியாபாரம் அல்ல.  இது இரகசியமானது அல்ல. மக்களின் பிரச்சினை மக்களுக்குத்தான் கூறவில்லை என்றாலும் உங்களிடமுள்ளவர்களுக்காவது கூறுங்கள் என வட கிழக்கு முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் தெரிவித்தார்.

முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் அமரர் அமிர்தலிங்கத்தின் 91 ஆவது பிறந்தநாள் நினைவுப் பேருரை நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை யாழ்.பொது நூலகத்தில் இடம்பெற்றபோது நினைவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் அவர் உரையாற்றுகையில், 

அரசியல் தீர்வு விடையத்தில் அரசாங்கத்துடன் பேசுகின்றர்கள் அதில் என்ன இருக்கிறது என்ன நடக்கின்றது என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும். அது தான் சிரமமாக இருப்பினும் உங்களுடன் கூட உள்ளவர்களுக்காவது தெளிவுபடுத்தவேண்டும்.

இன்று என்ன தீர்வு அரசாங்கத்துடன் பேசுகின்றார்கள் என்றால் ஒருவருக்கும் தெரியாது. தனிநாட்டுக்குப் போக முடியாது. சமஷ்டிக்குள் போக முடியாது. அதி உச்சமான விடையத்தை கேட்கமுடியாது. என்றால் என்னதான் தேவை என்பதை சொல்லவேண்டும். 

தனிப்பட்ட வியாபாரம் அல்ல.  இது இரகசியமானது அல்ல. மக்களின் பிரச்சினை மக்களுக்குத்தான் கூறவில்லை என்றாலும் உங்களிடமுள்ளவர்களுக்காவது கூறுங்கள்.

வடக்கு கிழக்கு முதலமைச்சராக என்னைக் கூறுகின்றார்கள். ஆனால் இது வந்த போது அண்ணன் அமிர்தலிங்கத்தையே இதனை ஏற்றுக்கொள்ளுமாறு கோரினோம். ஆனால் இதனை ஒரு சிலர் ஏற்றுக்கொள்ளவில்லை. அவரது விருப்பத்திற்கு மாறாகவே அதனை அவர் ஏற்றுக்கொள்ளிவல்லை. அன்று அவர் அதனை ஏற்றிருந்தால் அவர் தான் வடக்கு கிழக்கின் முதல் முதலமைச்சராக இருப்பார். அவ்வாறு வந்திருப்பாராகஇருந்தால் வடக்கு கிழக்கு மாகாணம் என்பது இன்றும் இருந்திருக்கும். இன்று அவர் உயிருடன் இருந்திருப்பார். பாதுகாக்கப்பட்டிருப்பார் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31