மஹிந்தவை தமிழ் மக்களின் தலைவராக தமிழர்கள் ஏற்று அங்கீகரிக்க வேண்டும் - முன்னாள் எம்.பி. பியசேன

Published By: Vishnu

17 Sep, 2018 | 12:39 PM
image

உன்னத தலைவரான மஹிந்த ராஜபக்ஸவை தமிழ் மக்களின் தலைவராக தமிழர்கள் ஏற்று அங்கீகரிக்க வேண்டும். எத்தனையோ நன்மைகளை தமிழ் மக்களுக்கு பெற்று கொடுத்திருக்கின்றபோது ஏன் நாம் அவரை தமிழ் மக்களின் தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாதுதென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொத்துவில் தொகுதி அமைப்பாளருமான பொடியப்பு பியசேன தெரிவித்தார்.

 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்பாட்டை காரைதீவில் வலுப்படுத்துவது தொடர்பான கூட்டம் நேற்று இக்கட்சியின் காரைதீவு பிரதேச அமைப்பாளர் பி. ரி. தர்மலிங்கம் தலைமையில் அவரது அலுவலகத்தில் இடம்பெற்றது. 

காரைதீவிலுள்ள வட்டாரங்களுக்கு அமைப்பாளர்கள் இதன்போது நியமிக்கப்பட்டதுடன் புதிய அங்கத்தவர்களும் இணைத்து கொள்ளப்பட்டனர்.

இங்கு பியசேன மேலும் தெரிவிக்கையில்,

எமது தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டு சென்று இருந்தார். அங்கு அவருக்கு மிக மகத்தான வரவேற்பு வழங்கப்பட்டது. 

மஹிந்த யுகம் மீண்டும் வெகுவிரைவில் நிச்சயம் மலரும் என்கிற மகிழ்ச்சியான செய்தி எமக்கு இதன் மூலம் வெளிப்பட்டு நிற்கின்றது. 

இன்னொரு வகையில் சொல்வதானால் மக்கள் மஹிந்த ராஜபக்ஸவுடன் ஒன்றித்து நிற்பதால் மஹிந்த யுகம் வெகுவிரைவில் மீண்டும் மலர்வது நிச்சயம் என்பதை இந்தியா அடையாளம் கண்டு உள்ளது. 

அதாவது அவரின் கைகளை முறிக்க முடியாது என்பதை உணர்ந்து அவற்றை முத்தமிடுகின்றது. இதே நிலைப்பாட்டுக்குதான் உலக நாடுகள் அனைத்தும் வந்து உள்ளன.

சிங்கள மக்கள் மஹிந்த ராஜபக்ஷவுக்கு பின்னால் அணி திரண்டு நிற்கின்றனர். தமிழ் மக்களுக்கு உண்மையான தலைவர்கள் யாரும் இது வரையில் கிடைக்கவே இல்லை. தமிழ் தலைவர்கள் தமிழ் மக்களுக்கு எந்தவொரு நன்மையையும் பெற்றுக்கொடுக்கவில்லை.  மாறாக தமிழ் மக்களை மாறாத துன்ப சக்கரத்துக்குள் தள்ளி இருக்கின்றார்கள். 

எனவே இந்நாட்டின் உன்னத தலைவரான மஹிந்த ராஜபக்ஷவை தமிழ் மக்களின் தலைவராக தமிழர்கள் ஏற்று அங்கீகரிக்க வேண்டும். ஒரு இனத்தின் உண்மையான தலைவன் இன்னொரு இனத்துக்கு எதிரானவனாக இருக்க மாட்டான். காந்திஜி இலங்கை தமிழ் மக்களுக்கு எந்த நன்மையையும் செய்து இருக்கவில்லை. 

ஆனால் அவரை நாமும் மகாத்மா என்று கொண்டாடுகின்றோம். அப்படியாயின் மஹிந்த ராஜபக்ஷ எத்தனையோ நன்மைகளை தமிழ் மக்களுக்கு பெற்று கொடுத்திருக்கின்றபோது ஏன் நாம் அவரை தமிழ் மக்களின் தலைவராக ஏற்று கொள்ள முடியாது என்று வினவ விரும்புகிறேன்.

அரசியலையும், அபிவிருத்தியையும் முஸ்லிம் சகோதர இனத்தவர்களிடம் இருந்து தமிழர்கள் கற்க வேண்டி உள்ளது. இரண்டையும் அவர்கள் ஒன்றாகவே முன்னெடுக்கின்றனர். 

குறிப்பாக அம்பாறை மாவட்டத்தை பொறுத்தவரையில் அரசியலோடு சேர்ந்த அபிவிருத்தியையும், அபிவிருத்தியோடு இணைந்த அரசியலையும் ஒருசேர முன்னெடுப்பதன் மூலமே இம்மாவட்டத்தில் உள்ள தமிழ் பிரதேசங்கள் முஸ்லிம் பிரதேசங்களை போல முன்னேற்றங்களை அடைதல் கை கூடும். 

நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து பொதுவாக அம்பாறை மாவட்டத்தை குறிப்பாக காரைதீவை சேர்ந்த பாடசாலைகள், கோவில்கள் போன்றவற்றுக்கு பல இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடுகள் செய்து கொடுத்திருக்கின்றேன். ஆனால் நல்லாட்சியில் அபிவிருத்தி எதுவும் இடம்பெறுவதாக தெரியவில்லை. நான் மீண்டும் அதிகாரத்துக்கு வருகின்றபோது அபரிமித அபிவிருத்தியை எனது மக்களுக்கு பெற்று கொடுப்பேன் எனத் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38