மலையக அபிவிருத்திக்கான ஐந்தாண்டு தேசிய திட்டத்திற்கான வரைவு இன்று மலையக புதிய கிராமங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பி. திகாம்பரத்தினால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

100 பில்லியன் ரூபா நிதி செலவில் குறித்த திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த புதிய திட்டத்தின்போது புதிய கிராமங்கள் பல நிர்மாணிக்கப்படவுள்ளன.   2020 ஆம் ஆண்டு இதற்கான பணிகள் நிறைவடையவுள்ளன.

மலையக அபிவிருத்திக்கான ஐந்தாண்டு திட்டத்திற்கான வரைவு அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று அமைச்சர் பி.திகாம்பரம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டார்.

மேலும்  நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க , தேசிய கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், பெருந்தோட்ட கைத்தொழில் துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க ,ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான அரவிந்த குமார், வடிவேல் சுரேஷ் வேலு குமார் மற்றும் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான உதய குமார்   உள்ளிட்ட பெருமளவிலான முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.  

மலையக அபிவிருத்திக்கான ஐந்தாண்டு திட்டத்திற்கான வரைவு ஆவணத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சர்களான ரவி கருணாநாயக்க மற்றும் நவீன் திஸாநாயக்க ஆகியோருக்கும் அமைச்சர் திகாம்பரம் வழங்கி வைத்தார்.