சிவனடிபாதமலை என்ற தமிழ் பெயர் பலகை யாரால் எப்படி, எந்த அடிப்படையில் அகற்றப்பட்டது என்பது தொடர்பில் உடனடியாக ஆய்வு அறிக்கை அனுப்பும்படி நுவரெலியா மாவட்ட செயலாளரை கேட்டுக் கொண்டுள்ளதாக அமைச்சர்  மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

மேலும் சிவனடிபாதமலை என்ற தமிழ் பெயர் பலகையை மலையடிவாரத்தில் மீண்டும் பொருத்தும்படியும் நுவரெலியா மாவட்ட செயலாளரிடம் வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.