வவுனியா புகையிரத நிலையத்தில் இன்று அதிகாலை இளைஞன் ஒருவரைக் கேரளா கஞ்சாவுடன் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை 4 மணியளவில் வவுனியா புகையிரத நிலையத்தில் வைத்து  யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா வந்த புகையிரதத்தில் 19 கிலோ 265கிராம் கேரளா கஞ்சாவினை பொதி செய்து எடுத்து வந்த வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய இளைஞன் ஒருவரையே இவ்வாறு கைதுசெய்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார், கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை வவுனியா மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்த  நடவடிக்கையும் எடுத்தமை குறிப்பிடத்தக்கது.