(நா.தினுஷா) 

நாட்டின் வானிலை நாளை முதல் மாற்றமடையும் என எதிர்வு கூறியுள்ள வளிமண்டலவியல் திணைக்களம், சப்ரகமுவ மாகாணம் மற்றும் களுத்துறை, காலி, மாத்தறை  ஆகிய மாவட்டங்களில் ஓரளவு மழை பெய்யக் கூடிய சாத்தியக்  கூறுகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அத்துடன் நாட்டின் தெற்கு கடல் பிரதேசங்களில் மழை அல்லது இடி மின்னலுடன் கூடிய வானிலை நிலவுவதுடன் காற்றின் வேகமும் சற்று அதிகரித்து காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.