நேற்று காலை கொழும்பு தாமரைத் தடாக கலையரங்கிற்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அதன் செயற்பாடுகளை பார்வையிட்டார்.

காலை நேர உடற்பயிற்சியை மேற்கொண்டதன் பின்னரே ஜனாதிபதி இவ்வாறு தாமரைத் தடாக கலையரங்கின் செயற்பாடுகளை பார்வையிட சென்றார்.

தாமரைத் தடாக வளாகத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி, ஜனாதிபதி செயலகத்தின் கீழ் செயற்படும்  நிறுவனம் என்றவகையில் அதன் பராமரிப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட செயற்பாடுகள் தொடர்பில் கண்டறிந்தார்.

நகர்ந்து செல்லக்கூடிய பிரதான மேடையின் இயக்கம், ஒளியூட்டல், ஒலிக் கட்டுப்பாடு உள்ளிட்ட தொழிநுட்ப செயற்பாடுகள் தொடர்பாகவும் விசாரித்து அறிந்துகொண்டார்.

கலையரங்கின் மேல் மாடியில் அமைந்துள்ள திறந்தவெளி அரங்கம் மற்றும் அதன் கீழ் மாடியில் அமைந்துள்ள நீர்த் தடாகம் ஆகியவற்றைப் பார்வையிட்ட ஜனாதிபதி, அங்கு மேற்கொள்ளப்படும் சுற்றாடல் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் கண்டறிந்தார்.

தாமரைத் தடாக கலையரங்கத்தில் முறையான பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு அதனை கண்கவர் அமைவிடமாக சிறந்த நிலையில் தொடர்ச்சியாக பேண வேண்டும் என ஜனாதிபதி  இதன்போது அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.