ஹட்டன் கல்விவலயத்திற்குட்பட்ட மஸ்கெலியா சமனெலிய சிங்கள பாடசாலை வாளகத்தில் காணப்பட்ட குளவிகூடுகளை அகற்றும் நடவடிக்கை இன்று.ஞாயிற்றுகிழமை மேற்கொள்ளபட்டது

கடந்த வெள்ளிகிழமை நன்பகல் 12 மணியளவில் மஸ்கெலியா சமனெலிய பாடசாலை வாளகத்தில் இருந்த குளவிகூடு கலைந்து தரம் 06,07,08, ஆகிய வகுப்புக்களை சேர்ந்த 28 மாணவர்கள் குளவி  கொட்டுக்கு இலக்காகி மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டிருந்தனர் .

இதனால் கடந்த வெள்ளிகிழமை பாடசாலையின் நடவடிக்கைகள் 12 மணியோடு இடைநிருத்தபட்டிருந்தது. 

இந்நிலையில் குறித்த பாடசாலையின் அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க இன்று கண்டி செங்கடகல பகுதியில் இருந்து வருகைதந்த குளவிகூடுகள் அகற்றுவோர் மஸ்கெலியா குறித்த பாடசாலைக்கு வரவழைக்கபட்டு பாடசாலை வாளாகத்தில் காணப்பட்ட குளவி கூடுகளை அகற்றப்பட்டது.

இதேவேளை இந்த குளவிகூடுகள் அகற்றபடும் தெளிவூட்டல் தொடர்பான நிகழ்வு ஒன்றும் பாடசாலை மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.