தமிழக மீனவர் தொடர்பில் சிறந்த தீர்வு எட்டப்படும் ; தமிழ்நாடு கல்வித்துறை அமைச்சர்

Published By: Digital Desk 4

16 Sep, 2018 | 03:33 PM
image

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் மற்றும் முதலமைச்சர் ஆகியோர் இலங்கை மீன்வளத்துறை அமைச்சருடன் கலந்துரையாடுவார்கள் என இந்திய தமிழ்நாடு கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

இந்திய இலங்கை மீனவர் பிரச்சனை தொடர்பாக இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் விஜயமுனி சொய்சாவுடன் இன்று காலை சந்தித்து கலந்துரையாடினோம். எனவும் தெரிவித்தார்.

மறைந்த தமிழக முதலமைச்சர் எம்.ஜி.இராமச்சந்திரனின் 102 வது பிறந்த தின நிகழ்வுகள் அவர் பிறந்த ஊரான இலங்கையில் கண்டியில் இன்று நடைபெற்றது.

இலங்கை கல்வி அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் காலை 10.00 மணிக்கு இதயக்கனி நாளிதழின் ஆசிரியர் எஸ்.விஜயன் ஏற்பாடு செய்த எம்.ஜி.ஆர் தொடர்பான புகைப்படக் கண்காட்சி இடம்பெற்றது.

கண்காட்சியை இந்திய தமிழ்நாடு கல்வி பள்ளித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், இலங்கையின் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் ஆகியோரும் தமிழ்நாடு சிவகாசி மாவட்ட எம்.எல்.ஏ ஆகியோரும் இணைந்து ஆரம்பித்து வைத்தனர்.

இதன்போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

மறைந்த தமிழக முதலமைச்சர் எம்.ஜி.இராமச்சந்திரனின் 102 வது பிறந்த தின நிகழ்வுகள் அவர் பிறந்த ஊரான இலங்கையில் கண்டியில் இன்று நடைபெறுகின்றது. 

இதில் கலந்து கொள்வதற்காக எங்களுக்கு நல்ல வாய்ப்பு ஒன்றை இலங்கை கல்வித்துறை அமைச்சர் இராதாகிருஷ்ணன் ஏற்படுத்தி தந்துள்ளார். இதனால் இவருக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றொம்.

இலங்கையில் அனைத்து பாடசாலைகளுக்கும் ஒரு இலட்சத்து ஐந்தாயிரம் நூல்கள் வழங்கப்படவுள்ளன.

அவர் பிறந்த ஊரில் நாங்கள் காலடி எடுத்து வைத்தது எங்களுக்கு பெருமையாகவுள்ளது என இந்திய தமிழ்நாடு கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மேலும் தெரிவித்தார்.

இதன்போது இலங்கை கல்வி அமைச்சர் இராதாகிருஷ்ணன் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கை இந்திய மீனவ பிரச்சனையை பொருத்தவரையில் இன்னும் ஓர் இரு மாதங்களில்; இலங்கை இந்திய மீன்வளத்துறை அமைச்சர்களுக்கிடையில் பேச்சுவார்த்தை இடம்பெறும்.

இன்று காலை எமது மீன்வளத்துறை அமைச்சரை நானும், தமிழ்நாடு கல்வி பள்ளித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சந்தித்தோம். இதன்போது எமது இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் சென்னை செல்வதாக தெரிவித்தார்.

சென்னையில் உள்ள மக்களோடு சந்தித்த பிறகு டெல்லி அரசாங்கமும், இலங்கை அரசாங்கமும் சேர்ந்து இதற்கு தீர்வு காண பேச்சுவார்தைகளை முன்னெடுக்க உள்ளதாகவும் இதன் மூலம் இலங்கை இந்திய மீனவர்கள் தொடர்பான பிரச்சனைக்கு தீர்வு எட்டப்படும் என எதிர்பார்க்கின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 10:50:13
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08