(இராஜதுரை ஹஷான்)

மேல் மாகாண சபைக்கான கதிரை கொள்வனவு செய்யும் விடயத்தில் இடம்பெறவிருந்த பாரிய மேசாடி முறியடிக்கப்பட்டுள்ளதென தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணாராச்சி, மேல்மாகாண சபை ஆளுநர் கதிரை கெள்வனவை தடை செய்தமை வரவேற்க்கத்தக்கது எனவும் தெரிவித்தார்.

மேலும் மேல் மகாண சபைக்கான சொகுசு கதிரை கொள்வனவு உட்பட புதிய கட்டட நிர்மாணிப்பு தொடர்பில் கணக்காளர் நாயகம் துரிதமாக பரீசிலனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

அத்துடன் மேல் மாகாண சபையில் இடம்பெறும் ஒவ்வொரு விடயங்களு சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளமையினால், கணக்காளர் நாயகத்தின் பரீசிலனைகளின் அறிக்கை கிடைக்கப் பெற்றதன் பின்னர் பல விடயங்கள் பகிரங்கப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.