அமெ­ரிக்­காவின் ஓரி­கானை சேர்ந்த ஒரு­வ­ருக்கு வழக்­கொன்றில் விதிக்­கப்­பட்ட 50 ஆண்­டுகள் சிறைத்­தண்­டனை, அவர் கொன்­ற­தாக குற்­றஞ்­சாட்­டப்­பட்ட நாய் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டதை தொடர்ந்து இரத்து செய்­யப்­பட்­டது.

குழந்தை பாலியல் துஷ்­பி­ர­யோகம் சார்ந்த வழக்கில் 42 வய­தான ஜோஸுவா ஹார்னெர் என்­பவர் மீதான குற்­றச்­சாட்டு கடந்த 2017ஆம் ஆண்டு உண்மை என்­ப­தாக நிரூ­பிக்­கப்­பட்­டது.

தான் செய்த குற்­றத்தை வெளியில் சொல்­லாமல் தன்னை தடுப்­ப­தற்­காக ஹார்னெர் தன் கண்­ணெ­திரே லாப்­ரடார் ரக நாயை சுட்­டுக்­கொன்­ற­தாக இந்த புகாரை எழுப்­பிய பெண் கூறி­யி­ருந்தார்.

இவ் வழக்கை ஆய்வு செய்த 'ஓரிகான் இன்­னொசென்ஸ் ப்ராஜெக்ட்' என்னும் குழுவை சேர்ந்தோர் அந்த நாய் வேறொரு வீட்டில் இருந்­ததை கண்­ட­றிந்­தனர்.இந்த வழக்கு விசா­ர­ணை­யின்­போது ஏக­ம­ன­தாக தீர்ப்பு வழங்­கப்­ப­ட­வில்லை என்றும், தாங்கள் இந்த வழக்கு சார்ந்த ஆதா­ரங்­களை ஆய்­விற்கு உட்­ப­டுத்­தி­ய­போது அவை "பலத்த சந்­தே­கத்தை" ஏற்­ப­டுத்­தி­ய­தா­கவும் அரசு சாரா சட்ட உதவி அமைப்­பொejhன்று தெரி­வித்­தது.

அந் நாயின் இருப்­பி­டத்தை கண்­ட­றி­வதன் மூலம் இந்த வழக்கில் திருப்­பு­முனை உண்­டாகும் சூழ்­நிலை உரு­வா­னது. ஏனெனில், குற்­றஞ்­சாட்­டப்­பட்ட ஹார்னெர், தான் அந்த நாயை சுட்­டுக்­கொல்­ல­வில்லை எனவும், அதை நிரூ­பிப்­பதன் மூலம் புகா­ர­ளித்­த­வரின் கூற்று பொய்­யா­னது என்று நிறுவ முடி­யு­மென்றும் அவர் கூறி­யி­ருந்தார். 

 விசா­ரணை அதி­கா­ரியும், மாவட்ட வழக்­க­றிஞர் ஒரு­வரும் இணைந்து அந்த நாயை தேடி பல்­வேறு இடங்­க­ளுக்கு பயணம் செய்­தனர்.தீவிர முயற்­சிக்கு பிறகு அந்த   நாயை அம்­மா­நி­லத்தின் கடற்­க­ரை­யோர பகு­தியில் கண்­ட­றிந்­தனர்." அந்த நாயின் தனித்­து­வ­மான தோற்றம், மற்ற ஆதா­ரங்­களை வைத்து சுட்­டுக்­கொல்­லப்­பட்­ட­தாக கூறப்­பட்ட நாய்தான் இது என்­பது உறு­தி­செய்­யப்­பட்­டது.

"லூசி என்­ற­ழைக்­கப்­பட்ட அந்த நாய் சுடப்­ப­ட­வில்லை. லூசி உயி­ருடன் நல்ல நிலையில் இருக்­கி­றது" என்று மாவட்ட வழக்­க­றிஞர் அலு­வ­ல­கத்தின் சார்பில் தாக்­கல்­செய்­யப்­பட்ட பதில் மனுவில் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

இதனால், ஓரிகான் மாநி­லத்தின் மேல்­மு­றை­யீட்டு நீதி­மன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் ஹார்­னெரை விடு­தலை செய்­த­துடன், மறு­வி­சா­ர­ணைக்கும் உத்­த­ர­விட்­டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.