கண்டியில் கட்டுமானப் பணியில் இருந்த கட்டடம் ஒன்றுக்கருகில் மண் அள்ளிக் கொண்டிருந்தவர்கள் மீது  சீமெந்துக்கட்டு ஒன்று விழுந்ததில்  ஒருவர் பலியானதுடன் இருவர் காயத்திற்குள்ளான நிலையில் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கண்டி பேராதனை வீதியில் கட்டுமானம் இடம்பெற்ற கட்டிடத்திற்கு அருகில் இன்று நண்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

மண் அள்ளும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த போதே இச்சம்பவம் நடந்துள்ளது.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் பலாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய சாந்தகுமார் என அடையாளங் காணப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.