பணத்துக்காக பெண்ணின் பிணத்தை கடத்திய திருடர்கள்

Published By: Digital Desk 4

16 Sep, 2018 | 12:14 PM
image

 பிணவறையிலிருந்து பெண்ணின் பிணத்தை திருடிய கொள்ளையர்கள் அதனை திரும்ப கொடுக்க வேண்டுமானால் ரூ.10 இலட்சம் கொடுக்க வேண்டும் என நிபந்தனை விதித்துள்ள சம்பவம் நைஜீரியாவில் இடம்பெற்றுள்ளது.

நைஜீரியா நாட்டின் பிரைட் வான்ஸி நகரில் அமைந்துள்ள ஒரு பிணவறையில் இருந்து ஒரு பெண்ணின் பிணம் திடீரென மாயமாகி விட்டது. அதை யாரோ கடத்தி விட்டனர். இதனால் பிணவறை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது பிணவறையின் மேலாளருக்கு ஒரு மர்ம தொலைபேசி  அழைப்பு வந்தது.

அதில் பேசியவர்கள் பிணம் திரும்ப கிடைக்க வேண்டுமானால் தங்களுக்கு ரூபா 10 இலட்சம் (5மில்லியன் நைரா) பிணைத் தொகையாக வழங்க வேண்டும் என பேரம் பேசினார்.

இதற்கிடையே பிணத்தை கடத்தியதாக சுக்வுடி சுக்வு (38). இபே பெதால் லஷாரஸ் (28). ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 2 பேரும் முன்னாள் குற்றவாளிகள் ஆவர்.

அவர்களில் சுக்வு 6 ஆண்டுகளும், லஷாரஸ் 14 ஆண்டுகளும் சிறை தண்டனை அனுபவித்து சமீபத்தில்தான் வெளியே வந்தனர். இவர்களில் ஒருவர் தன்னிடம் வேலை செய்தவர் என பிணவறை மேலாளர் தெரிவித்தார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08
news-image

பரப்புரைக்காக தமிழ்நாடு சென்ற ராகுல் காந்தி...

2024-04-15 13:08:34
news-image

நான் பொலிஸ் உத்தியோகத்தராக இருந்திருந்தால் எனது...

2024-04-15 12:53:59
news-image

தற்பாதுகாப்பு மற்றும் தாக்குதல் திட்டங்களிற்கு இஸ்ரேலிய...

2024-04-15 11:44:59