நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியாக இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டி இன்று டுபாயில் இடம் பெறுகின்றது.

இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணியின் தலைவர் மொட்ராஸா முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். 

இதேவேளை, இலங்கை கிரிக்கெட் அணியின்  சிரேஷ்ட வீரரும் வேகப்பந்து வீச்சாளருமான லசித் மலிங்க ஒருவருட காலத்திற்கு பிறகு இலங்கை அணியில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.