துப்பாக்கி சூட்டில்  11 சிறுவன் உட்பட மூன்று பாலஸ்தீனியர்கள்  பலி!

Published By: Daya

15 Sep, 2018 | 02:07 PM
image

காஸாவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இஸ்ரேலிய படையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 11 சிறுவன் உட்பட மூன்று பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

வெள்ளிக்கிழமை காஸா எல்லையில் 15000 பாலஸ்தீனியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் டயர்களை எரித்ததாகவும் அதிலிருந்து புகைகள் வெளியாவதை பயன்படுத்தி படையினர் மீது கற்களையும் கைக்குண்டுகளையும் வீசியதாகவும் இதில் இஸ்ரேலிய படையினர் சிலர் காயமடைந்தனர் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இதேவேளை 11 வயது சாடி அப்டெல் அல் உட்பட மூவர் இஸ்ரேலிய படையினரின் துப்பாக்கி பிரயோகத்தில் கொல்லப்பட்டுள்ளனர் என பாலஸ்தீன வைத்திய தரப்புகள் தெரிவித்துள்ளன.

எனது மகன் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஏனைய ஆயிரக்கணக்கானவர்களுடன் ஆர்ப்பாட்டத்திற்கு செல்வது வழமை இன்றைய வெள்ளிக்கிழமை அவன் மாவீரர் ஆகவேண்டும் என்ற விதி இருந்திருக்கின்றது என சிறுவனின் தந்தை தெரிவித்துள்ளார்.

காஸா எல்லையிலிருந்து 70 மீற்றர் தொலைவில் சிறுவன் சுடப்பட்டதை பார்த்ததாக  நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47