மூட நம்பிக்கையால் மாற்றுத்திறனாளிக்கு நேர்ந்த கொடூரம்!!!

Published By: Digital Desk 7

15 Sep, 2018 | 01:15 PM
image

ஒடிசாவில் மத நம்பிக்கை என்ற பெயரில் மாற்றுத்திறனாளி ஒருவரை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு தீ மூட்டியதில் குறித்த நபர் பலத்த தீக்காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஒடிசா மாநிலத்தின் கந்தமால் என்ற பகுதியில் அமைந்துள்ள கோவில் ஒன்றில் 30 வயதான பாபனி ஷங்கர் நந்தா என்ற மாற்றுத்திறனாளியை தலைகீழாக தொங்கவிட்டு தீ மூட்டினால் அவர் குணமடைந்து விடுவார் என குறித்த நபரின் தாயாரிடம் கூறப்பட்டுள்ளது.

இதை நம்பிய  பாபனியின் தாய் தனது மகனின் உடலில் உள்ள குறைப்பாடுகளை தீர்ப்பதற்காக பலிகுடா என்னும் கிராமத்திலுள்ள கோவிலுக்கு குறித்த சடங்கை செய்ய பாபனியை அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு வலுக்கட்டாயமாக பாபனியை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு தீ மூட்டியுள்ளனர்.

இதனால் பாபனிக்கு பலத்த தீக்காயங்கள் ஏற்பட கோவிலுக்குள் வைத்து பாபனிக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இச் சடங்கை செய்த பூசாரி விடயம் வெளியில் தெரிந்தால் தனக்கு ஆபத்து எனக் கருதி வீட்டில் வைத்து சிகிச்சை அளிக்குமாறும் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் எனவும் தாய்க்கு கூறியுள்ளார்.

நாட்கள் செல்ல செல்ல பாபனியின் உடல் நிலை மோசமடைய பெற்றோர் பாபனியை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.

வைத்தியர்களின் அறிவுறுத்தலின் பேரில் பெற்றோர் பூசாரிக்கெதிராக பலிகுடா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய பலிகுடா பொலிஸார் வழக்குப்பதிவு செய்து பூசாரியையும் அவரது உதவியாளரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10