சென்னை  சிறைக்குள் இருந்தபடி சர்வதேச கடத்தல் கும்பலுடன் உரையாடிய இலங்கை கைதி

Published By: Daya

15 Sep, 2018 | 11:37 AM
image

தமிழ் நாட்டின் புழல் சிறைக்குள் இருந்தவாறு  நவீன தொலைபேசிகளை பயன்படுத்தி சிறைக்கைதிகள் வெளிநாடுகள் உள்ளவர்களுடன் உரையாடியதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை புழல் சிறையில் பாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புழல் சிறையில் உள்ள கைதிகள் விலை உயர்ந்த தொலைபேசிகள், ஆடைகள்,  உணவு வகைகள் போன்றவற்றுடன் வாழ்கின்றனர் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

புழல்சிறை குறித்த இந்த குற்றச்சாட்டை நிருபிக்கும் வகையில் அவர்கள் எடுத்துக்கொண்ட செல்பி படங்களும் வெளியாகியுள்ளன.

இதனை தொடர்ந்து புழல்சிறையில் உள்ள சிறைக்கைதிகள் குறிப்பாக தீவிரவாதிகள் வெளிநாட்டில் உள்ளவர்களுடன் வட்ஸ் அப் மூலம் உரையாடியதாக தகவல் வெளியாகியுள்ளது.

பங்களாதேசம் மலேசியா  வளைகுடா நாடுகளிற்கு 100 தடவைகளிற்கு மேல் இவர்கள் வட்ஸ் அப் மூலம் உரையாடியுள்ளனர்.

இவர்கள் பெரும்பாலும் கஞ்சா கடத்தல் போலி நாணயதாள்கள்  பரிவர்த்தனை குறித்து தொலைபேசியில் உரையாடியுள்ளனர்.

இலங்கையை சேர்ந்த ஒருவரும் அவரது நண்பருமே வெளிநாடுகளிற்கு வட்ஸ் அப் மூலம் அதிகம் பேசியுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையை சேர்ந்த நபர் சிறையிலிருந்த படி பங்களாதேசில் உள்ள சர்வதேச கடத்தல் கும்பலும் வட்ஸ் அப்பில் உரையாடியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்பிற்கு எதிரான வழக்கு – நீதிமன்றத்திற்கு...

2024-04-20 08:19:02
news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17