இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன் பிடித்த இந்திய மீனவர்கள் நான்கு பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம், காரைநகருக்கு மேற்கு கடற்பரப்பில் மீன் பிடித்துகொண்டிருந்த மீனவர்களே கைது செய்யப்பட்டுள்ளதுடன் படகொன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள்  காங்கேசன்துறை மீன்பிடி நீரியல்வள திணைக்கள அதிகாரிகளிடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.