ஆசிய கிண்ணத்திற்காக முட்டிமோதவுள்ள 6 ஆசிய அணிகள் : மோதல் நாளை ஆரம்பம்

Published By: Vishnu

14 Sep, 2018 | 06:51 PM
image

உலக கிரிக்கெட் அரசாங்கில் ஆசிய நாடுகளுக்கே உரித்தான ஆசிய கிண்ணப் போட்டியின் 14 ஆவது ஆசிய கிண்ணத்  தொடர் நாளை 15 ஆம் திகதி ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் மிகவும் கோலாகலமாக ஆரம்பமாகி எதிர்வரும் 28 ஆம்  திகதி வரை இடம்பெறவுள்ளது.

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்த‍ை பொருத்தவரையில் இதுவரை இரண்டு ஆசிய கிண்ணப் போட்டிகளை நடத்தியுள்ளது. அதன்படி முதலாவது ஆசிய கிண்ணத் தொடரை 1984 ஆம் ஆண்டிலும் ஐந்தாவது ஆசியக் கிண்ணத் தொடரை 1985 ஆம் ஆண்டிலும் நடத்தியிருந்தது.

அத்துடன் நாளை ஆரம்பமாகவுள்ள போட்டியை நடத்துவதன் மூலம் மொத்தமாக ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் மூன்று ஆசியக் கிண்ணத் தொடர்களை நடத்திய பெருமையை பதிவு செய்யும்.

அந்த வகையில் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் டுபாய் மற்றும் அபுதாபியிலுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானங்களில் ஆரம்பமாகும் ஆசிய கிண்ணப் போட்டிகளில் மொத்தமாக 13 போட்டிகள் இடம்பெறவுள்ளன. 

14 ஆவது தடவையாக நாளை ஆரம்பாகவுள்ள ஆசியக் கிண்ணத் தொடரில் ஐ.சி.சி.யின் முழு அங்கத்துவ நாடுகளான ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா, சப்ராஸ் அஹமட் தலைமையிலான பாகிஸ்தான், அஞ்சலோ மெத்தியூஸ் தலைமையிலான இலங்கை, மெஸ்ரபி மொட்ராஸா தலைமையிலான பங்களாதேஷ், அஸ்கார் ஆப்கான் தலைமையிலான ஆப்பாகிஸ்தானும் மற்றும்  ஆசியக் கிண்ணத்திற்கான தெரிவுப் போட்டிகளில் வெற்றிபெற்ற அங்கத்துவ நாடான அனுஸ்மன் ராத் தல‍ைமையிலான ஹொங்கொங் அணியுமாக மொத்தம் 6 அணிகள் பங்கு கொள்கின்றன. 

இதில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஹொங்கொங் ஆகிய அணிகள் குழு 'A' யிலும், இலங்கை, பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் குழு 'B' யிலும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

நாளை  15 ஆம் திகதி ஆரம்பமாகும் குழுநிலைப் போட்டிகள் 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இரண்டாவது சுற்றான 'சுப்பர் -4' சுற்றுக்கு முன்னேறும். 

செப்டெம்பர் 21 ஆம் திகதி ஆரம்பமாகும் இந்த சுற்றில் ஒவ்வொரு அணியும் ஏனைய அணியுடன் தலா ஒரு முறை பலப்பரீட்சை நடத்தவுள்ளது. 'சுப்பர் -4' சுற்றில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் செப்டெம்பர் 28 ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும்.

இதுவரை நடந்து முடிந்த ஆசியக் கிண்ணத் தொடர் வரலாற்றில் இந்திய அணி ஆறு தடவைகளும் (1984,1988, 1990-91, 1995, 2010, 2016 ) இலங்கை அணி ஐந்து தடவைகளும் (1986, 1997, 2004, 2008, 2014) பாகிஸ்தான் இரண்டு தடவைகளும் (2000, 2012) தொடரை வெற்றிகொண்டு கிண்ணத்தை கைப்பற்றியுள்ளன. 

ஒருநாள் தொடராக நடைபெறவுள்ள ஆசியக் கிண்ணத் தொடரில் விளையாடும் இலங்கை அணியை பொருத்தவரையில், நீண்ட நட்களுக்குப் பிறகு அனுபவம் நிறைந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான லசித் மலிங்க இணைக்கப்பட்டுள்ளமை அணிக்கு மிகப் பெரிய பலமாகவுள்ளது. 

இந்நிலையில் ஆசிய கிண்ணக் கிரிக்கெட்டில் சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என தெரிவித்த பாகிஸ்தான் அணியின் தலவைர் சப்ராஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆடுகளமானது ஸ்லோ பீட்ச் ஆக இருப்பதனால் சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கிய துருப்புச் சீட்டாக இருப்பார்கள் என தெரிவித்துள்ளார். 

இம்முறை போட்டித் தொடரின் முதல் போட்டியில் முன்னாள் ஆசிய சம்பியனான இலங்கை அணியும், இறுதியாக நடைபெற்ற ஆசிய கிண்ணத்தில் இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்ட பங்களாதேஷ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(ஜெ. அனோஜன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59
news-image

இத்தாலி மெய்வல்லுநர் போட்டியில் யுப்புன் அபேகோனுக்கு...

2024-04-15 16:16:50
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக் டென்னிஸில் பங்குபற்றி...

2024-04-15 13:06:04
news-image

மதீஷவின் பந்துவீச்சில் மண்டியிட்டது மும்பை : ...

2024-04-15 13:24:55
news-image

ரி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை முன்னோடி...

2024-04-14 22:18:48
news-image

பில் சோல்ட், மிச்செல் ஸ்டாக் பிரகாசிக்க,...

2024-04-14 19:59:07