அடுத்த ஜனாதிபதி யார்?- சர்வதேச சஞ்சிகையின் ஆய்வில் புதிய தகவல்

Published By: Rajeeban

14 Sep, 2018 | 05:04 PM
image

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆதரவு கட்சியே இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலில் வெற்றிபெறும் என எகனமிஸ்ட் சஞ்சிகை- Economist Intelligence Unit (EIU) -தெரிவித்துள்ளது .

எகனமிஸ்டின் இலங்கை குறித்த அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

எகனமிஸ்ட் மேலும் தெரிவித்துள்ளதாவது

இலங்கையில் அடுத்த நாடாளுமன்ற தேர்தல் 2020 நடுப்பகுதியில் இடம்பெறவுள்ளது நாங்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆசனங்களை கைப்பற்றி அரசாங்கத்தை அமைக்கும் என நாங்கள் கருதுகின்றோம்.

இந்த வருடம் இடம்பெற்ற உள்ளுராட்சி தேர்தலில் கட்சி பெற்ற பெரும் வெற்றி கட்சிக்கான ஆதரவையும் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிரான மனோநிலை அதிகரித்து வருவதையும் புலப்படுத்தியுள்ளது .

ஆளும் கூட்டணிக்குள் காணப்படும் முறுகல்  நிலை மற்றும் திறமையற்ற நிர்வாகம் காரணமாக ஐக்கியதேசிய கட்சியோ அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியோ மக்களின் நம்பிக்கையை மீளப்பெறமுடியாது.

இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி மீண்டும் தேர்தலில் போட்டியிடுவார்,19வது திருத்தம் காரணமாக முன்னாள் ஜனாதிபதியால் தேர்தலில் போட்டியிடமுடியாது எனினும் பிரதமர் பதவி உள்ளது.

மகிந்த ராஜபக்சவின் நெருங்கியசகா ஒருவரோ அல்லது உறவினரோ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறுவார்கள் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

ராஜபக்ச தரப்பு மீண்டும் உத்வேகம் பெற்றுள்ளது , கடந்த தேர்தலில் சிறிய வித்தியாசத்திலேயே சிறிசேன வெற்றிபெற்றதை கருத்தில் கொள்ளும்போது வாக்காளர் ஆதரவில் சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் ராஜபக்ச தரப்பு வேட்பாளர் வெற்றிபெறக்கூடும்.

அரசியல் நிச்சயமற்ற தன்மை அதிகரித்து வரும் நிலையில் நாங்கள் புதிய அரசமைப்பு முயற்சிகள் கவனத்தை இழக்கும் என நாங்கள் கருதுகின்றோம்,2020 வரை ஆட்சியிலிருப்பதே அரசாங்கத்தின் நோக்கமாக காணப்படும் என்பதால் புதிய அரசமைப்பை உருவாக்கும் முயற்சிகள் கவனத்தை இழக்கலாம்.

தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில் அரசமைப்பு சீர்திருத்தங்கள் நிறைவேற சாத்தியமில்லை என நாங்கள் கருதுகின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01