மசாஜ் நிலையம் சென்ற இளைஞனுக்கு ஏற்பட்ட பரிதாபம் ; யுவதிக்கு விளக்கமறியல்

Published By: Digital Desk 7

14 Sep, 2018 | 03:17 PM
image

ஆயுர்வேத மசாஜ் நிலையத்தில் மசாஜ் செய்து கொண்டு அதற்கான கட்டணத்தைச் செலுத்த மறுத்த இளைஞரின் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியை அறுத்த குறித்த நிலையத்தில் பணியாற்றும் யுவதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஆயுர்வேத மசாஜ் நிலையத்தில் மசாஜ் செய்து கொண்டு அதற்கான கட்டணத்தைச் செலுத்த மறுத்த இளைஞரின் கழுத்தில் அணிந்திருந்த 95000 ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியைப் பறித்தெடுத்ததாகச் சொல்லப்படும் ஆயுர்வேத சிகிச்சை நிலையத்தில் பணியாற்றும் யுவதியை கைது செய்து மாராவில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே குறித்த யுவதியை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.  

மாத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய பெண்ணே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவராவார். 

குறித்த யுவதி கடந்த சில மாதங்களாக வைக்கால் பிரதேசத்தில் அமைந்துள்ள மசாஜ் நிலையம் ஒன்றில் பணியாற்றுகின்றமை ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இச்சம்பவத்திற்கு முகம் கொடுத்த இளைஞர் சம்பவம் தொடர்பில் வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னரே குறித்த யுவதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்இ அந்த யுவதியினால் பறித்தெடுக்கப்பட்டதாகச் சொல்லப்படும் தங்கச் சங்கிலி மசாஜ் நிலையத்தின் குளியலறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

வென்னப்புவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பாலித அமரதுங்கவின் உத்தரவில் வென்னப்புவ பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43