சுமந்திரனுக்கு எதிராக முல்லைத்தீவில் ஒட்டப்பட்டுள்ள துண்டுபிரசுரம் !: பின்னணி என்ன?

Published By: J.G.Stephan

14 Sep, 2018 | 03:25 PM
image

"இது தமிழ் தலைவர்கள் எனப்படுவோர் ஐக்கியப்படவேண்டிய நேரம் "எனும் தலைப்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை விமர்சித்தும் தமிழ் தேசியகூட்டமைப்பின் செயற்பாடுகளை விமர்சித்தும் முல்லைத்தீவு நகரில் பரவலாக துண்டுபிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.

தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி கண்டறியும் சங்கம் எனும் அமைப்பின் பெயரை தாங்கி குறித்த சுவரொட்டிகள் ஒட்டபட்டுள்ளன.

இந்த சுவரொட்டியில் 'முதலில் நாம் ஒரு தமிழ் தலைவரை தேர்ந்தெடுக்கவேண்டும் ,நாம் ஒரு இணைப்பை அல்லது கூட்டணியை உருவாக்க வேண்டும் . சிங்களவர்களால் ஏமாற்றப்பட்ட அரசியல்வாதிகள் ,தமிழர்களை ஏமாற்றும் அரசியல் வாதிகள் சிங்கள முகவர்கள் அனைவரும் ஓய்வு பெறவேண்டும்.

நமது அரசியல் தீர்வு அமேரிக்கா ,ஐரோப்பிய ஒன்றியம் ,இந்தியா மட்டும் தான் தீர்வு காணமுடியும் என நம்பும் தமிழர்கள் மட்டும் இந்த இணைப்பில் சேரவேண்டும். என குறிப்பிடப்பட்டுள்ளதோடு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனையும் கடுமையாக விமர்சித்துள்ளது.

சுமந்திரன் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடாது, த. தே. கூட் டமைப்பின் பேச்சாளர் பதவியையும் இராஜிநாமா செய்ய வேண்டும்.

தமிழ் மக்களை இனவாத கலவரங்கள் மற்றும் வெகுஜன கொலைகள், சிங்கள அடக்குமுறை, தமிழ் நிலங்களை கைப்பற்றுவதை நிறுத்த ஆகியவற்லிருந்து பாதுகாப்பதற்காக சமஷ்டி தேவை என்பது பல காலமாக தமிழரின் தேவை. இதனை தந்தை செல்வா தனது கொள்கையாக போராடினார்.

சுமந்திரன் தமிழ் மக்களுக்கு சமஷ்டி தேவையில்லை என்று காலி நகரில் சிங்களவரிடம் கூறினார். யார் இவருக்கு இந்த உரிமையை கொடுத்தது. தமிழினத்தை தொடர்ந்தும் சிங்களவருக்கு இரை யாக்கும் சுமந்திரனே தமிழ் அரசியலிருந்து வெளியேறு.

காலியில் ஏன் இப்படி கூறினாய் :”சமஷ்டி ஆட்சி எங்களுக்கு தேவையில்லை, இப்போது காணப்படுகின்ற மாகாணசபை ஆட்சியே எங்களுக்கு போதும், அதில் சிறிய மாற்றறங்கள் செய்தால் சரி, அதற்கேற்ற மாதிரி எங்களால் ஆட்சி செய்ய முடியும், தமிழ் மக்கள் அதற்கேற்ற மாதிரி தங்களை மாற்றிக் கொள்வார்கள். “

இப்படி காலியில் கூறிய பின்னர் ஏன் பொய்யை தமிழர்களுக்கு சொன்னாய்:”சமஷ்டி என்ற பெயர் பலகையில் தொங்கிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. ஆக்கபூர்வமான அதிகாரப் பகிர்வே தேவை என்றுதான் காலியில் குறிப்பிட்டேன்.” இது ஒரு நம்பிக்கை துரோகம்.

இப்படி 310 மைல் தூரத்துக்ககுள் பெரிய பொய்யை துணிந்து சொல்லும் சுமந்திரன்; ஜெனீவா, வாஷிங்டன், நியூ டெல்லி, லண்டனில் ஒரு தமிழ் சாட்சியும் இல்லாமல் எப்படி துணிகரமாக பெரிய பொய்களை சொல்லியிருப்பார். ஒருவரையும் வெளி நாட்டு பயணத்தில் கொண்டு செல்லாத்திற்கு காரணம் தனது பொய்களை சொல்வதற்கா ? வெளிநாட்டு நாடுகளிலும் ஐ.நா.வுடனும் கையாள்வதில் இருந்து சுமந்திரனை நிறுத்துங்கள். இவர் ஒரு பொய்யன்.

த தே கூ, தமிழரை வடகிழக்கு இணைந்த சமஷ்டிக்கு உறுதியளித்து வாக்குகளை பெற்றது. இது ஒரு பெரிய பொய்யாகும். எதிர்க்கட்சித் தலைமை, ஒவ்வொரு அரசாங்கம் சார்பான வாக்குகளுக்கு தலா 2 கோடி ரூபாய் , 12 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான அரசாங்கத்தில் பதவிகளும், கார்களும் பெறுவதற்காக, வடகிழக்கு இணைந்த சமஷ்டி என்று ஏன் பொய் சொன்னீர் சுமந்திரன்?

சுமந்திரனும் இவரது சகாக்களும் சமஷ்டி புதைந்திருக்குது என்பதும், சிங்களத்தில் “எக்கிய ராஜ்ஜ – ஒற்றை ஆட்சி “, தமிழில் பெயர் பலகை இல்லை என்பதும் ஒரு பம்மாத்து.

ஏன் தமிழில் பெயர் பலகை இல்லை? தமிழினம் ஒரு அடிமையா? தரம் குறைந்த இனமா? அல்லது தமிழர் பாமரர்களா? – நீர் சுமந்திரன் யார் இதனை எம்மக்கு சொல்லுவதற்கு? உங்கள் சமஷ்டி ஒரு மாட்டு சாணி மாதிரி.

சுமந்திரனுக்கு சமஷ்டி என்ன என்பது தெரியாது? நீங்கள் கனடாவுக்குப் போகும் போது, தெருவில் எந்தத் தமிழையும் கேளுங்கள், அவர்கள் சமஷ்டி பற்றி உங்களுக்கு போதிப்பார்கள். அவர்கள் ஒவொரு நாளும் சமஷ்டியின் லாபத்தை அனுபவித்து வருகிறார்கள், ஏனெனில் கனடா ஒரு சமஷ்டி நாடு.

தமிழ் இனத்துக்கு என்ன செய்தீர்? நீர் தமிழ் தியாகியா? போரில் காயாப்பட்டவரா? தமிழினத்துக்காக மறியல் சென்றிரா ? 2009இல் தமிழர்கள் கொள்ளப்பட்ட பொது போரை நிறுத்த கொழும்பில் ஆர்ப்பாட்டம் செய்தீரா ?

மாறாக,

1. சிங்கள பௌத்தத்திற்கு முதன்மையான இடத்தை ஏன் சுமந்திரன் கொடுத்தார்? இந்த பொய்யனுக்கு யார் இந்த அனுமதி கொடுத்தது ?

2. மாகாண சபையை குழப்பியடித்தார் சுமந்திரன். நிதி மந்திரி ரவி கருணாநாயக்கவை பாவித்து வட மாகாண அபிவிருத்தியை ஏன் தடுத்தார்? புல பெயர் மக்களின் முதலமைச்சர் நிதியத்தை, நிதி மந்திரி ரவி கருணாநாயக்கவை பாவித்து ஏன் மறுத்தீர்? பல தடவை ஏன் முதல் மந்திரியை விலக்குவதற்கு முயன்றார்? ஏன் விக்னேஸ்வரன் சுமந்திரனை விட அறிவானவர் என்பதாலும் தமிழ் தேசியத்தின் பலன்களை கூறுவதாலுமா, உண்மையான சமஷ்டி மற்றும் தமிழ் சரித்திரங்களை எடுத்துரைப்பதனாலோ? இது சுமந்திரனின் சிங்கள நண்பர்களுக்கு பிடியாதா?

3. நெடுங்கேணியில் 4000 சிங்களவருக்கு சிங்களத்தினால் உண்டுபண்ணிய பொய் காணி உறுதி கொடுத்து சிங்களம் தமிழர் காணிகளை பிரித்தெடுத்த போது, சிறிசேனாவுடனும், ரணிலுடனும் மேடையிலிருந்து கைதட்டி வரவேற்ற சுமந்திரன்.

4. தமிழ் கூட்டமைப்பை உடைக்க ஆயுத குழுக்கள் என பிரித்தவர்

5. தமிழ் புலம் பெயர் அமைப்புகளை பலவீனப்படுத்தி உடைத்து எறிந்து அவர்களின் ஒற்றுமையை குழைத்தது ஏன்?

6. வட்டுகோட்டை கல்லூரியையும், உடுவில் கல்லூரியையும் சிதைத்து இப்போது அமெரிக்கன் மிஷன் பணம் கொடுப்பதை குறைத்து, இவரையும் இவர் சார்ந்தோர்களையும் விலகும்படி அமெரிக்கன் மிஷன் கோரியும் எனும் விலகிய பாடில்லை.

7. ஏன் வெளி நாட்டுக்களின் அழுத்தங்களை ஸ்ரீ லங்காவுக்கு கொடுக்க மறுத்தார் அல்லது நாடவில்லை? சிங்கள நபர் என்பதாலோ?

8. சுமந்திரன் சமீபத்தில்(2015) கூறினார் “கடந்த மாகாண சபைத் தேர்தலில் கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே அதிக ஆசனங்களை பெற்றிருந்த போதும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு அதனை விட்டுக்கொடுத்திருந்தது. ” இதன் பின்னால் தர்க்கம் என்ன? ஏன் தமிழர் ஆடசியை கிழக்கில் தவித்தீர்? ஏன் தமிழருக்கு நீர் எதிரியா? இதைத்தான் கொழும்பு செய்ய சொன்னதா?

9. ஏன் திசாநாயத்திற்கு 20 வருட கடூழிய சிறை து எடுத்து கொடுத்தீர்? அவர் வாகரையில் சிங்கள ஆமி எம்மினத்தை பட்டினி போட்டு, தமிழர்களை துரத்தி, வாகரையை கைப்பற்ற முயலுகிறார்கள் என்று எழுதியதை, திசைநாயகம் தவறான தகவலை எழுதினார் என என்று சிங்களத்தை தழுவி, ஏன் கூறினீர்? புலம் பெயர் தமிழரின் தொடர்பால், ஒபாமா திசைநாயத்தை அமெரிக்கா எடுத்து சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

10. யாழில் எந்த வழக்கை வெற்றி பெற்றீர் ? உதய சூரியன் சின்னத்தை த. தே. கூட்டடமைப்புக்கு எடுக்கும் வழக்கில் வெற்றி பெற்றாயா? வட மாகாண சபையின் பிரதம செயலாளர் (Chief Secretary) க்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றாயா? இரண்டு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் கொலை வழக்ககில் வெற்றி பெற்றாயா? கொன்ற இரு போலீசும் சுதந்திரமாக திரிகிறார்கள். டக்ளஸ் எதிரான உதயன் வழக்கில் வெற்றி பெற்றாயா? ஒரு போலி எண்ணம் சுமந்திரன் தான் திறமான வக்கீல் என்று. ஆனந்தசங்கரி விட சுமந்திரன் மோசமான வக்கீல்.

11. இப்போது சிங்கள நீதிபதி மூலம் விக்னேஸ்வரனுக்கு கஷ்டம் கொடுக்கிறாய். அரசியல் சாசனத்தில் ஒரு டெனிஸ்வரன் விடயத்தில் பதில் உண்டு. யார் வேலை கொடுக்கிறாரோ அவரே வேலையிலிருந்து நீக்கலாம் (Rule of Thumb, who hire can fire). இந்த ஸ்ரீலங்கா அரசியல் சாசனம் ஒரு மாட்டு சாணி போல் தான். ஒரு படிப்பு இல்லாத ஒருவரால் எழுதிய அரசியல் சாசனம்.

12. போருக்குப் பின்னர், சிங்கள உயர் நீதிமன்றத்தில் வடகிழக்கு தமிழ் மக்களை கட்டுப்படுத்த சிங்கள நீதிபதிகள் அனுப்ப வேண்டும் என்று சுமந்திரன் கோரினார் . அவர் ஒரு தமிழ் பிரதிநிதியா ?

13. முல்லைத்தீவில் ஆமியால் எடுக்கப்பட்ட வீட்டையும் காணியையும் விடுக்க நடந்த போராட் டத்தை மடக்க, சுமந்திரன் வழக்கு போட உள்ளதாய் கூறி விபரம் எடுத்து ஒருமே இதுவரை செய்ய இல்லை. இது போராட்டங்களை மடக்கும் வழிமுறை. காலம் செல்ல செல்ல சுமந்திரனின் சிங்களத்திற்கு உதவி செய்யும் வித்தைகளை உணர முடியும்.

14. காணாமல் போனோரின் பெற்றோர் இலங்கை அரசாங்கத்தால் அலரி மாளிகைக்கு அழைக்கப்பட்டனர். அரசாங்கத்தை பாதுகாக்க சுமந்திரன் அங்கு வந்தார். இதனால் பெற்றோரின் பயணம் தோல்வி அடைந்தது.

15. சுமந்திரன் ஜெனீவாவில் தமிழர்களை மறுபடியும் ஏமாற்ற முயல்வார் . நாம் அவரை தமிழ் அரசியலில் இருந்து அகற்ற வேண்டும். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முன்னாள் தூதர் திரு. ஹுசைன் ஸ்ரீ லங்காவின் போர்க்குற்றத்தை சர்வதேச நீதிமன்றத்திற்கு தெரிவிக்க விரும்புகிறார், ஆனால் சிங்கள ஏஜெண்டான சுமந்திரன் இன்னும் இரு ஆண்டுகள் நீடிக்கும்படி விரும்புகிறார் சுமந்திரன் தீர்வைப் பெற்றுத்தர வரவில்லை , தமிழர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க தான் வந்தார்.

இவர் ராஜினாமா செய்யாவிடின், தாயகத்தில் தமிழர்கள் ஜனநாயக பண்பை பாவித்து தமிழ் தேசிய கூட்ட்டமைப்பிலிருந்து அகற்ற செயல்பட வேண்டும். எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27