பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட இரண்டு மாத சுற்றிவளைப்பில் வென்னப்புவ பொலிஸ் பிரிவின் சிரிகம்பல குடியேற்றத்தைச் சேர்ந்த 213 பேர் கைது.வென்னப்புவ பொலிஸ் பிரிவின் சிரிகம்பல குடியேற்றத்தைச் சுற்றி கடந்த இரண்டு மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது ஹெரோயின் மற்றும் கஞ்சா விற்பனையுடன் தொடர்புடைய 213 பேரைக் கைது செய்துள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஜூலை 10 ஆம் திகதி முதல் செப்டெம்பர் 4ம் திகதி வரையிலான காலப்பகுதியிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது ஹெரோயினைத் தம்வசம் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்த சம்பவங்களுடன் தொடர்புடைய 161 பேரும், கஞ்சாவை தம்வசம் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்த குற்றச்சாட்டில் 52 பேருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.  

வென்னப்புவ பொலிஸ் பிரிவில் போதைப் பொருள் விநியோகம் இடம்பெறும் முக்கிய இடமாக சிரிகம்பல குடியேற்றம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அந்த பிரதேசத்தைச் சுற்றி மூன்று பொலிஸ் குழுக்களை ஈடுபடுத்தி 24 மணிநேரமும் அவதானத்துடன் இருந்து இவ்வாறு இந்நபர்களைக் கைதுசெய்ததாக வென்னப்புவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் பாலித அமரதுங்க தெரிவித்தார்.