ஏழு பேர் விடுதலை தொடர்பில் தமிழக ஆளுநர் மத்திய அரசின் ஆலோசனையை கோரியுள்ளதை ஏற்க முடியாது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் ஏழு தமிழர்களையும் விடுதலை செய்யுமாறு கோரி தமிழக அரசு அனுப்பிய பரிந்துரையை  தமிழக ஆளுநர் மத்திய அரசிற்கு அனுப்பிவைத்துள்ளார்.

தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி  ஒரு வாரத்திற்கு பின்னர் அவர் இந்த பரிந்துரையை மத்திய அரசிற்கு அனுப்பிவைத்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள திருமாவளவன் தமிழக அரசே தீர்மானிக்கலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில் ஆளுநர் மத்திய அரசின் ஆலோசனையை கோரியுள்ளது அதிர்ச்சியளிக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.

இது காலம் தாழ்த்தும் நடவடிக்கை மாத்திரமல்ல மாநிலங்களின் அதிகாரங்களிற்கு எதிரானது எனவும் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் மாநில அரசை உதாசீனம் செய்துள்ளார் எனவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்