(எம்.மனோசித்ரா)

பொது எதிரணியை வெற்றிப் பாதையில் கொண்டு செல்லக்கூடிய சிறந்த தலைவர்கள் உள்ளனரென லங்கா சமசமாஜக் கட்சி தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். 

எனவே பசில் ராஜபக்ஷ மற்றும் கோத்தாபய ராஜபக்ஷ குறித்து தற்போது தீர்மானிக்க முடியாது. கட்சியின் நிகழ்ச்சி நிரல் ஆவணங்களிலும் இது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக எனது சகோதரர்கள் போட்டியிடலாம் என தெரிவித்திருந்தமை குறித்து பொது எதிரணியின் நிலைபாடு தொடர்பில் இன்று  வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.