முன்னாள் அமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க மீது கொழும்பு, கோட்டை நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிணைமுறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் போலி ஆவனங்கள் முன்வைக்கப்பட்டதாக குற்றம் சுமத்தி, குற்றப்புலனாய்வு திணைக்களம் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.