ஆசிய வலைப்பந்து கிண்ணத்தை வென்றுள்ள இலங்கை வலைப்பந்தாட்ட அணியினர்  நேற்று  முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியை சந்தித்தனர்.

போட்டிகளில் திறமையாக விளையாடி தாய்நாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கும் இலங்கை வலைப்பந்தாட்ட அணி வீராங்கனைகளின் திறமையை பாராட்டிய ஜனாதிபதி அவர்களது எதிர்கால விளையாட்டு நடவடிக்கைகள் வெற்றிபெற தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், அதற்காக அரசாங்கம் சகல அனுசரணைகளையும் வழங்கும் என்றும் குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி, விளையாட்டுத் துறை அமைச்சர் பைசர் முஸ்தபாவும் இலங்கை வலைப்பந்தாட்ட அணியுடன் இணைந்து குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இதேநேரம் 2018 உலக கரம் கிண்ணத்தை வெற்றிபெற்ற இலங்கை ஆண்கள் அணியும் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்ட இலங்கை மகளிர் அணியும் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியை சந்தித்தனர்.