ஏன் ஜனாதிபதி அவசரமாக அமைச்சரவையைக் கூட்டினார் ; விளக்குகிறார் சுஜீவ

Published By: R. Kalaichelvan

13 Sep, 2018 | 06:00 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று அவசர அமைச்சரவைக் கூட்டம் இன்று நண்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்  சுஜிவ சேனசிங்ஹ விளக்மொன்றை அளித்தார்.

இக்கூட்டத்தில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

 நாட்டின் பொருளாதாரம் குறிப்பிட்ட மட்டத்தில் எழுச்சி பெற்றுள்ளது.  இருப்பினும் பொது மக்களின் வாழ்க்கை செலவுகள் ஒரு வரையறுக்கப்பட்ட அதாவது நிச்சயிக்கப்பட்ட நிலையில் காணப்படாமல்  உள்ளது. 

 தற்போதைய  பொருளாதார நிலைப்பாட்டினைக் கொண்டு அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைப்பதும். இதன் காரணமாக பொருளாதார முன்னேற்றத்திற்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாத வகையில் புதிய கொள்கைத்திட்டங்களை அறிமுகப்படுத்தல் தொடர்பிலும் அமைச்சரவை உறுப்பினர்களின் கருத்துக்கள் பறிமாற்றிக் கொள்ளப்பட்டது. 

இவ்விடயத்தில் ஜனாதிபதி  புதிய நுட்பங்களை கையாள்வது தொடர்பில் ஆலோசனை வழங்கினார்.

 2020 ஆம்  ஆண்டு  ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ   உட்பட அவரது சகோதரர்கள் போட்டியிடுவது அரசாங்கத்திற்கு ஒரு சவாலல்ல. 

ஆனால் யாரை களமிறக்குவது என்ற விடயத்தில் பொது எதிரணிக்குள் இன்று பாரிய கருத்து வேறுப்பாடுகள் காணப்படுகின்றது. 

சிறப்பு  விசேட நீதிமன்றம் ஒரு தரப்பினரை மாத்திரம் குறி வைத்து உருவாக்கப்படவில்லை. இந்த நீதிமன்றம் இரண்டு வருடத்திற்கு முன்னர் உருவாக்கப்பட்டிருந்தால் பலரது குற்றங்கள் மேலும்  பகிரங்கப்படுத்தப்பட்டிருக்கும். இன்று எவரும்  தன்னை பாதுகாத்துக்கொள்ள அரசாங்கத்தை குற்றஞ்சாட்டிருக்கமாட்டார்கள் என்றார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று அவசர அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04