ஊர்காவற்துறை , காரைநகர் பிரதேசத்திலுள்ள கடற்படை முகாம் சிப்பாய் ஒருவர் துப்பாகியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

குறித்த சம்பவத்தில் 26 வயதான கோடுஹேன பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. 

சடலம் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு பிரேதப் பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ள நிலையில் தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லையெனவும்  இது குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஊர்காலற்துறை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.