ஏழு தமிழர்களையும் விடுதலை செய்யக்கூடாது- ராஜீவ் குண்டு வெடிப்பில் உயிர் தப்பிய பெண் பொலிஸ் எதிர்ப்பு

Published By: Daya

13 Sep, 2018 | 03:23 PM
image

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் ஏழு தமிழர்களையும் விடுதலை செய்வதற்கு அந்த சம்பவத்தில் காயங்களுடன் உயிர்தப்பிய முன்னாள் பெண் காவல்துறை அதிகாரி எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

ராஜீவ்காந்தி குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவேளை அந்த பகுதியில பணியாற்றிய அனுசியா டெய்சி என்பவர் படுகாயம் அடைந்த நிலையில் உயிர் தப்பினார்.

இந்நிலையில் அவர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரையும் விடுதலை செய்யக்கூடாது என கருத்து வெளியிட்டுள்ளார்.

1991 மே 21 ஆம் திகதி எனது வாழ்நாளில் கறுப்பு நாள் என அவர் தெரிவித்துள்ளார்.

அன்றைய நாள் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்பதற்காக ஸ்ரீபெரும்புத்தூர் வந்திருந்தார், என தெரிவித்துள்ள அவர் கூட்டத்திலிருந்த பெண்களை கட்டுப்படுத்தும் பொறுப்பை என்னிடம் ஓப்படைத்திருந்தனர் எனவும் தெரிவித்துள்ளார்.

நானும் வேறு 10 பெண் காவல் துறையினரும் பணியில் ஈடுபட்டிருந்தோம் நான் ராஜீவ்காந்திக்கு அருகில் நின்றிருந்தேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் நான் தடுமாறி விழப்போனேன் அப்போது ராஜீவ்காந்தி என்னை பார்த்து பதட்டப்படாதீர்கள் எனவும் தெரிவித்தார் என அனுசியா குறிப்பிட்டுள்ளார்

சிறுமியொருவர்  ராஜீவ்காந்தியிடம் எதனையோ தெரிவித்துக்கொண்டிருந்தார் ராஜீவ்காந்தி அதனை செவிமடுத்துக்கொண்டிருந்தார் தீடீரென பயங்கர சத்தம் கேட்டது எனது உடலை ஏதோ துளைத்துக்கொண்டு சென்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேகத்தில் நான் தூக்கியெறிப்பட்டேன், எனது உடலின் இடது புறம் முற்றாக சிதைவடைந்தது, எனவும் குறிப்பிட்டுள்ள அவர் நான் எனது கைவிரல்கள் மூன்றை இழந்தேன்,முடிகள் அனைத்தும் கருகிவிட்டன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வெடிகுண்டு சிதறல்கள் என்னை துளைத்திருந்தன யாரோ என்னை மருத்துவமனைக்கு தூக்கிக்கொண்டு ஓடினார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

மூன்று மாதங்கள் வரை நான் சிகிச்சை பெற்றேன் எனினும் பின்னர் நான் மீண்டும் காவல்துறைக்கு திரும்பினேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நளினி உட்பட ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கு தமிழக அரசு துடிப்பதையும்  அரசியல் கட்சிகள் போராடுவதையும் பார்க்கும்போது நெஞ்சு கொதிக்கின்றது எனவும் அனுசியா டெய்சி தெரிவித்துள்ளார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17